Home
Tablets

ஜனவரி 10 உறுதி.. 8850mAh பேட்டரி.. டால்பி விஷன்.. இந்தியாவுக்கு வரும் Xiaomi டேப்லெட்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி பேட் 7 (Xiaomi Pad 7) மாடலை இந்தியாவில் வரும் ஜனவரி 10-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த சியோமி பேட் 7 மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி பேட் 7 அம்சங்கள் (Xiaomi Pad 7 Specifications): 11.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி பேட் 7 மாடல் அறிமுகம் செய்யப்படும். பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவரும் என்பதால் கேமிங், எடிட்டிங் போன்ற வசதிகளுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10, டால்பி விஷன் போன்ற டிஸ்பிளே அம்சங்களும் இந்த புது சியோமி டேப்லெட் மாடலில் உள்ளன.

ஜனவரி 10 உறுதி.. இந்தியாவுக்கு வரும் Xiaomi டேப்லெட்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7+ Gen 3) சிப்செட் வசதியுடன் சியோமி பேட் 7 அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 8,850mAh பேட்டரி வசதியுடன் இந்த சியோமி பேட் 7 அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

13எம்பி ரியர் கேமரா உடன் சியோமி பேட் 7 அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

Xiaomi HyperOS 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் சியோமி பேட் 7 வெளிவரும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்ப அப்டேட்கள் கிடைக்கும். பின்பு டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (quad speakers) இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

ஜனவரி 10 உறுதி.. இந்தியாவுக்கு வரும் Xiaomi டேப்லெட்.. எந்த மாடல்?

வைஃபை 7, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி பேட் 7 மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் மாடல் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த சியோமி பேட் 7 வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, சியோமி பேட் 7 ஆனது 25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவருவதால் நல்ல வரவேற்பு இருக்கும். பின்பு அடுத்த ஆண்டு பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 7 India Launch Date Revealed: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X