Home
Tablets

அதிரவிடும் விலை.. 16ஜிபி ரேம்.. 120W சார்ஜிங்.. 50MP கேமரா.. அறிமுகமானது சியோமி டேப்லெட்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6எஸ் ப்ரோ எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 120 வாட்ஸ் சார்ஜிங், 50எம்பி கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. இப்போது இதன் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி பேட் 6எஸ் ப்ரோ அம்சங்கள் (Xiaomi Pad 6S Pro specifications): 12.4-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி பேட் 6எஸ் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 3048 x 2032 பிக்சல்ஸ், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 (HDR 10), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

அதிரவிடும் விலை.. அறிமுகமானது சியோமி டேப்லெட்.. எந்த மாடல்?

3.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் (3.2GHz Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் வசதியுடன் இந்த சியோமி பேட் 6எஸ் ப்ரோ மாடல் அறிமுகம் செய்ய்பட்டுள்ளது. அதேபோல் கேமிங் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் ஜிபியு (Adreno next-gen GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என்கிற நான்கு வேரியண்ட்களில் சியோமி பேட் 6எஸ் ப்ரோ மாடல் விற்பனைக்கு வரும். மேலும் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6எஸ் ப்ரோ மாடல். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சியோமி டேப்லெட்.

சியோமி பேட் 6எஸ் ப்ரோ மாடலில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோபோன்கள் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

10000எம்ஏஎச் பேட்டரி (10000mAh battery) வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6எஸ் ப்ரோ மாடல். எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ( 120W fast charging) வசதியும் உள்ளது. அதேபோல் 590 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி பேட் 6எஸ் ப்ரோ மாடல்.

அதிரவிடும் விலை.. அறிமுகமானது சியோமி டேப்லெட்.. எந்த மாடல்?

கருப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்களில் சியோமி பேட் 6எஸ் ப்ரோ வெளிவந்துள்ளது. குறிப்பாக வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி யுஎஸ்பி 3.2 ஜென் 1 போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல்.

அதேபோல் சியோமி பேட் 6எஸ் ப்ரோ மாடல் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். குறிப்பாக சியோமி பேட் 6எஸ் ப்ரோ மாடலின் ஆரம்ப விலை 3299 yuan ( ரூ.38,610) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 6S Pro launched with 16GB RAM: check price, specifications, colors
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X