8840mAh பேட்டரி.. 128GB மெமரி.. 13MP கேமரா.. தள்ளுபடி விலையில் சியோமி டேப்லெட்.. எந்த மாடல்?
பண்டிகை காலம் என்பதால் பிளிப்கார்ட், அமேசான், எம்ஐ.காம் உள்ளிட்ட பல தளங்களில் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சாதனங்களை இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.
அதேபோல் எம்ஐ.காம் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி பேட் 6 (Xiaomi Pad 6) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சியோமி பேட் 6 மாடல் தற்போது ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சியோமி பேட் 6 மாடலை வாங்கினால் ரூ.3250 தள்ளுபடி கிடைக்கும்.

எனவே இந்த அசத்தலான சியோமி பேட் 6 மாடலை ரூ.20,000 பட்ஜெட்டில் தற்போது வாங்க முடியும். மேலும் இந்த சியோமி பேட் 6 மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
சியோமி பேட் 6 மாடலில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 7என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 650 ஜிபியு வசதி உள்ளது. மேலும் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான சியோமி டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
13எம்பி ரியர் கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சியோமி பேட் 6. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சியோமி சாதனம். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
8840 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சியோமி பேட் 6 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த சியோமி பேட் 6 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை 6,புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6 மாடல். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் எடை 490 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி பேட் 6 மாடல் ஆனது 11-இன்ச் 2.8கே டிஸ்பிளே வசதியை கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2880 x 1800 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த சியோமி டேப்லெட் வெளிவந்துள்ளது.

மிஸ்ட் ப்ளூ மற்றும் கிராஃபைட் கிரே நிறங்களில் இந்த சியோமி பேட் 6 மாடலை வாங்க முடியும். குறிப்பாக தரமான சிப்செட், அருமையான கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் சியோமி டேப்லெட் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
அதேபோல் சியோமி ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்களை இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்கலாம். மேலும் சியோமி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








