ஜூன் 13 வரை.. புது டேப்லெட் வாங்குறத தள்ளி வைங்க.. ஏன்னா இந்தியாவுக்கு வருது பிரமாண்ட டேப்லெட்.!
சியோமி நிறுவனம் இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப் எனப் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட சியோமி நிறுவனத்தின் சாதனங்கள் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சியோமி நிறுவனம் தரமான டேப்லெட் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஜூன் 13-ம் தேதி இந்தியாவில் சியோமி பேட் 6 எனும் டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இணையதளத்தில் வெளியான சியோமி பேட் 6 மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

11-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6 மாடல். பெரிய டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 144Hz ரிப்ரெஷ் ரேட், 2880 x 1800 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, டால்பி விஷன், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், ஹார்டுவேர்-லெவல் லோ புளூ லைட் ஐ ப்ரோடெக்ஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
சியோமி பேட் 6 மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு அட்ரினோ 650 ஜிபியு மற்றும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த டேப்லெட் இந்தியாவுக்கு வருகிறது.

புதிய சியோமி பேட் 6 மாடலில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் இருக்கும். குறிப்பாக டால்பி அட்மோஸ் உடன் 4 ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி டேப்லெட். பின்பு 4 மைக்ரோபோன்கள் ஆதரவும் இதில் உள்ளது.
எல்இடி பிளாஸ் ஆதரவுடன் 13எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி பேட் 6 மாடல். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சியோமி டேப்லெட்.
விரைவில் அறிமுகமாகும் சியோமி சியோமி பேட் 6 ஆனது 8840 எம்எஏச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாச சியோமி டேப்லெட் அறிமுகமாகும்.

வைஃபை 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6 மாடல். பின்பு இந்த டேப்லெட் மாடலின் எடை 490 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமேசான் மற்றும் எம்ஐ.காம் தளத்தில் இந்த டேப்லெட் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








