Home
Tablets

நீங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் களமிறங்கும் சியோமி பேட் 6.! எப்போது அறிமுகம் தெரியுமா?

ஒப்போ, நோக்கியா, லெனோவா நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் அட்டகாசமான டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளன. தற்போது
இந்நிறுவனங்களுக்கு போட்டியாக சியோமி நிறுவனமும் கம்மி விலையில் ஒரு டேப்டெல் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

 சியோமி

சியோமி

அதாவது சியோமி நிறுவனம் சியோமி பேட் 6 எனும் டேப்லெட் மாடலை தான் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சியோமி பேட் 6
டேப்லெட் உடன் சியோமி பேட் 6 ப்ரோ, சியோமி பேட் 6 ப்ரோ 5ஜி மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது இணையத்தில் கசிந்த சியோமி டேப்லெட் மாடல்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். சியோமி பேட் 6 ஆனது 7800எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி பேட் 6

சியோமி பேட் 6

சியோமி பேட் 6 மாடலில் மீடியாடெக் Dimensity சிப்செட் வசதி உள்ளது. பின்பு இந்த டேப்லெட் மாடல் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன்
வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சியோமி டேப்லெட்.

 சியோமி பேட் 6 ப்ரோ மற்றும் பேட் 6 ப்ரோ 5ஜி

சியோமி பேட் 6 ப்ரோ மற்றும் பேட் 6 ப்ரோ 5ஜி

சியோமி பேட் 6 ப்ரோ மற்றும் சியோமி பேட் 6 ப்ரோ 5ஜி மாடல்கள் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு இந்த இரண்டு டேப்லெட் மாடல்கள் LTPO டிஸ்பிளே மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ஆதரவைக் கொண்டுள்ளன.

குறிப்பாக சியோமி பேட் 6 ஆனது குறைவான விலையில் வெளிவரும். அதேசமயம் சியோமி பேட் 6 ப்ரோ மற்றும் பேட் 6 ப்ரோ 5ஜி
மாடல்கள் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி 12டி

சியோமி 12டி

மேலும் சியோமி நிறுவனம் இந்த டேப்லெட் மாடல்களுக்கு முன்பு சியோமி 12டி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த மாதம் சியோமி 12டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இணையத்தில் கசிந்த சியோமி 12டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 12டி சிப்செட்

சியோமி 12டி சிப்செட்

சியோமி 12டி ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி உள்ளது என்றே கூறலாம். அதாவது இந்த போன் மீடியாடெக் Dimensity 8100 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பல வசதிகளுக்கு இந்த சிப்செட் Dimensity 8100 சிப்செட் மிக அருமையாக பயன்படும். குறிப்பாக
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த சியோமி ஸ்மார்ட்போன்.

அருமையான கேமரா

அருமையான கேமரா

புதிய சியோமி 12டி ஸ்மார்ட்போன் 108எம்பி Samsung ISOCELL HM6 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும்
வீடியோக்களை எடுக்க முடியும்.

குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி போன். மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே 20எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த சியோமி ஸ்மார்ட்போன்.

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

புதிய சியோமி 12டி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1220 x 2712 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட்போன்.

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

புதிய சியோமி 12டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த சியோமி 12டி ஸ்மார்ட்போன் ரூ.40,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
XIAOMI PAD 6 SERIES May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X