Home
Tablets

ஒவ்வொருத்தரும் வாங்க ஆசை படுவீங்க.. 50MP கேமரா, 10,000mAh பேட்டரி.. களமிறங்கும் புதிய Xiaomi டேப்லெட்.!

ஒப்போ, விவோ, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் கம்மி விலையில் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் இந்நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களை விட சியோமி நிறுவனத்தின் டேப்லெட் மாடல்களுக்கு தான் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்கிறது சியோமி.

இந்நிலையில் சியோமி நிறுவனம் மீண்டும் ஒரு அசத்தலான டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி புதிய சியோமி பேட் 6 மேக்ஸ் (Xiaomi Pad 6 Max) எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சியோமி பேட் 6 மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

50MP கேமரா, 10,000mAh பேட்டரி.. களமிறங்கும் புதிய Xiaomi டேப்லெட்.!

இந்நிலையில் சியோமி பேட் 6 மேக்ஸ் டேப்லெட் ஆனது பல அசத்தலான அம்சங்களுடன் வரும் என்பதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும். மேலும் ஆகஸ்ட் 14-ம் தேதி சியோமி பேட் 6 மேக்ஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பிறகு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளியான சியோமி பேட் 6 மேக்ஸ் டேப்லெட் மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

அதாவது சியோமி பேட் 6 மேக்ஸ் டேப்லெட் ஆனது கிரே நிறத்தில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் கேமரா, பெரிய டிஸ்பிளே மற்றும் தரமான பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என சியோமி நிறுவனம் கூறியுள்ளது.

சியோமி பேட் 6 மேக்ஸ் டேப்லெட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் மாடலில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ், கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

14-இன்ச் 2கே ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி பேட் 6 மேக்ஸ் மாடல் வெளிவரும். பெரிய டிஸ்பிளே எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி டேப்லெட்.

குறிப்பாக சியோமி பேட் 6 மேக்ஸ் மாடலில் 10,000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். எனவே சில நிமிடங்களில் இந்த டேப்லெட் மாடலை சார்ஜ் செய்துவிட முடியும்.

50MP கேமரா, 10,000mAh பேட்டரி.. களமிறங்கும் புதிய Xiaomi டேப்லெட்.!

50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6 மேக்ஸ் டேப்லெட். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த டேப்லெட் வெளிவரும். அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6 மேக்ஸ்.

6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த சியோமி பேட் 6 மேக்ஸ் மாடல் அறிமுகமாகும். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் ஹர்மன் கார்டன் டியூன் செய்யப்பட்ட 8 ஸ்பீக்கர்களை கொண்டு இந்த சியோமி டேப்லெட் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சியோமி பேட் 6 மேக்ஸ் மாடல் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 6 Max with 10000mAh battery to launch on August 14: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X