Home
Tablets

மிரண்டு போவீங்க.. 16ஜிபி ரேம், 10000mAh பேட்டரி, 8 ஸ்பீக்கர்கள் உடன் Xiaomi டேப்லெட் அறிமுகம்.! என்ன விலை?

சியோமி நிறுவனம் புதிய சியோமி பேட் 6 மேக்ஸ் 14 எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேப்லெட் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சியோமி பேட் 6 மேக்ஸ் 14 அம்சங்கள் (Xiaomi Pad 6 Max 14 specifications): 14-இன்ச் 2.8கே எல்இடி டிஸ்பிளே வசதியக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய சியோமி டேப்லெட். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10, டால்பி விஷன், லோவ் ப்ளூ லைட் (Low Blue Light) சர்டிஃபைடு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல்.

8 ஸ்பீக்கர்கள் உடன் Xiaomi டேப்லெட் அறிமுகம்.! என்ன விலை?

3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm) சிப்செட் உடன் அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல். மேலும் MIUI Pad 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை கொண்டு இந்த அசத்தலான சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதேபோல் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ், 8 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டு இந்த சியோமி டேப்லெட் வெளிவந்துள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சர் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல். மேலும் இந்த டேப்லெட் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் சியோமி டேப்லெட்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுடன் இந்த சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல் வெளிவந்துள்ளது.. குறிப்பாக இதன் செல்பி கேமரா ஆனது ஸ்மார்ட் ஃபோகஸ் எனும் அசத்தலான அம்சத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல அட்டகாசமான வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த சியோமி டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் எடை 750 கிராம் ஆகும். பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8 ஸ்பீக்கர்கள் உடன் Xiaomi டேப்லெட் அறிமுகம்.! என்ன விலை?

விலை: 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி பேட் 6 மேக்ஸ் 14 விலை 3799 யுவான் (yuan) (இந்திய மதிப்பில் ரூ.43,525).
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடலின் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,815).
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடலின் விலை 4399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.50,400).
16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடலின் விலை 4399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.54,980).

குறிப்பாக சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல் உடன் ஸ்மார்ட் டச் கீபோர்டு மற்றும் சியோமி ஃபோகஸ் ஸ்டைலஸ் சாதனங்களை வாங்க முடியும். ஆனால் இந்த சாதனங்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும். அதேபோல் சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடல் ஆனது தற்போது சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியாவுக்கும் வரும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 6 Max 14 With 10000mAh Battery, 16GB RAM Launched: Check Specifications, Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X