இந்தியாவில் அறிமுகமானது Xiaomi Pad 6: விலையை கேட்டா இப்பவே புக் பண்ணிடுவீங்க...
சியோமி நிறுவனம் இன்று (13-6-2023) புதிய சியோமி பேட் 6 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் டேப்லெட்-க்கு போட்டி கொடுக்கும் வகையில் சியோமி நிறுவனம் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய சியோமி சாதனத்தின் அம்சங்களைப் பார்ப்போம்.
புதிய சியோமி பேட் 6 மாடல் ஆனது 11-இன்ச் 2.8கே டிஸ்பிளே வசதியை கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2880 x 1800 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த சியோமி டேப்லெட் வெளிவந்துள்ளது.

புதிய சியோமி பேட் 6 மாடலில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 7என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 650 ஜிபியு வசதி உள்ளது. மேலும் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான சியோமி டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
13எம்பி ரியர் கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சியோமி பேட் 6. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சியோமி சாதனம். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக 8840 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சியோமி பேட் 6 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த சியோமி பேட் 6 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை 6,புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 6 மாடல். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் எடை 490 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்ட் ப்ளூ மற்றும் கிராஃபைட் கிரே நிறங்களில் இந்த சியோமி பேட் 6 மாடலை வாங்க முடியும். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி பேட் 6 மாடலின் விலை ரூ.26,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.28,999-ஆக உள்ளது.

அதேபோல் சியோமி பேட் 6 மாடலை வரும் ஜூன் 21-ம் தேதி அமேசான், எம்.காம் தளங்களில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications