சபாஷ்: ஒன்பிளஸ் டேப்லெட்-ஐ ஓரங்கட்டும் இரண்டு Xiaomi டேப்லெட் மாடல்கள்.! அறிமுக தேதி இதுதான்
சியோமி நிறுவனம் அட்டகாசமான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் இரண்டு அசத்தலான டேப்டெல் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது சியோமி பேட் 6 மற்றும் சியோமி பேட் 6 பரோ மாடல்களை சீனாவில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி (நாளை)அறிமுகம் செய்ய உள்ளது சியோமி நிறுவனம். குறிப்பாக இந்த சியோமி டேப்லெட் மாடல்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடல்களுடன் சியோமி 13 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த சியோமி டேப்லெட் மாடல்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது சியோமி பேட் 6 மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதியுன் அறிமுகாகும். பின்பு சியோமி பேட் 6 ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வசதியுடன் வெளிவரும்.
குறிப்பாக இந்த இரண்டு டேப்லெட் மாடல்களின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த டேப்லெட் மாடல்களில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் இந்த டேப்டெல் மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது சிறந்த செயல்திறன் வழங்கும்.
அதேபோல் இந்த சியோமி பேட் 6 சீரிஸ் டேப்லெட்களில் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் சப்போரட் வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்2.8K 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், ஹார்டுவேர்-லெவல் லோ புளூ லைட் ஐ ப்ரோடெக்ஷன், டூயல் ஐ ப்ரோடெக்ஷன் சான்று உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சியோமி டேப்லெட் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி பேட் 6 மாடல் ஆனது 8840 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். பின்பு இதை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சியோமி பேட் 6 ப்ரோ மாடலில் 8600 எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த புதிய டேப்லெட் மாடல்களை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
இந்த சியோமி பேட் 6 சீரிஸ் டேப்லெட்களில் புதிதாக டீப் ஸ்லீப் மோட் உள்ளது. இதன் ஸ்டாண்ட்பை நேரம் 47.9 நாட்கள் என்று சியோமி தெரிவித்துள்ளது. குறிப்பாக புதிய சியோமி டேப்லெட் மாடல்கள் மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய டேப்லெட் மாடல்கள் 50எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர மெட்டல் பாடி, யுஎஸ்பி 3.0, கைரேகை சென்சார், 12ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய சியோமி டேப்லெட் மாடல்கள் அறிமுகமாகும். அதேபோல் இந்த சியோமி டேப்லெட் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த சியோமி டேப்லெட் மாடல்களுடன் வெளிவரும் சியோமி 13 அல்ட்ரா போன் ஆனது 6.7-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16ஜிபி ரேம், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 4900 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் தான் ஒன்பிளஸ் நிறுவனம் முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது அந்த டேப்லெட் மாடலுக்கு போட்டியாகத் தான் சியோமி நிறுவனம் இந்த இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications