ஏப்ரல் 27: இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான சியோமி பேட் 5.!
சியோமி நிறுவனம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி புதிய சியோமி பேட் 5 சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனம் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த சியோமி பேட் 5 சாதனத்தின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப்
பார்ப்போம்.

சியோமி பேட் 5 ஆனது 11-இன்ச் WQXGA டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்,எச்டிஆர் 10 மற்றும் TrueTone தொழில்நுட்பத்திற்கான ஆதரவு,டால்பி விஷன் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி பேட் 5, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த டேப்லெட் மிக அருமையாக பயன்படும். அதேபோல் MIUI 12.5சார்ந்த ஆண்ட்ராய்டு 11இயங்குதள வசதியுடன் வெளிவரும் சியோமி பேட் 5.

6ஜிபி ரேம் மற்றும்128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி பேட் 5 சாதனம். குறிப்பாக டால்பி விஷன் ஆதரவு மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சியோமி பேட் 5 மாடலின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றம் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சியோமி பேட் 5 மாடலில் 8720 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, பேஸ் அன்லாக் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல்.

அதேபோல் நான்கு ஸ்பீக்கர்கள் ஆதரவு, ஸ்டைலஸ் மற்றும் மேக்னட் கீபோர்ட் கவர் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். மேலும் இந்த சாதனம் இந்தியாவில் ரூ.25,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications