ஒரே கல்லுல 2 மாங்காய்.. Xiaomi அறிவித்துள்ள புதிய ஆஃபர்.. OnePlus-ஐ வம்புக்கு இழுக்குறதுல இவன் கில்லாடி!
ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் என்கிற கூற்றுக்கு ஏற்றபடி சீன நிறுவனமான சியோமி (Xiaomi), இரண்டு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதல் அறிவிப்பு அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய தயாரிப்பை பற்றியது; இரண்டாவது, அதே தயாரிப்பின் பழைய மாடல் மீதான விலைகுறைப்பை பற்றியது.
நாம் இங்கே பேசுவது சியோமியின் புதிய மற்றும் பழைய டேப்லெட் மாடல்களை பற்றித்தான். சியோமி தனது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு டேப்லெட் (Android Tablet) ஆன சியோமி பேட் 6 (Xiaomi Pad 6) மாடலை அடுத்த வாரம், அதாவது ஜூன் 13 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

சியோமி பேட் 6 ஆனது முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) டேப்லெட்டிற்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த போட்டியை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் சியோமி நிறுவனம், அதன் சற்றே பழைய சியோமி பேட் 5 (Xiaomi Pad 5) மீது விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.
சியோமி பேட் 5 பழைய விலை மற்றும் புதிய விலை: இது 128ஜிபி மற்றும் 256ஜிபி என மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. சுவாரசியமாக இந்த இரண்டின் மீதுமே விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 128ஜிபி மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ஆகியவைகள் முறையே ரூ.26,999 மற்றும் ரூ.28,999 க்கு வாங்க கிடைத்தன.
தற்போது 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,000 விலைக்குறைப்பை பெற்றுள்ளது, மறுகையில் உள்ள 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.500 குறைந்துள்ளது. அதாவது இனிமேல் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.25,999 க்கும், 256 ஜிபி ஆப்ஷன் ரூ.28,499 க்கும் வாங்க கிடைக்கும்.
காஸ்மிக் கிரே (Cosmic Grey) என்கிற சிங்கிள் கலர் ஆப்ஷனில் மட்டுமே வாங்க கிடைக்கும் சியோமி பேட் 5-யின் விலையை நீங்கள் இன்னும் குறைக்க விரும்பினால். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு (ICICI Bank Credit Card) வழியாக கிடைக்கும் ரூ.2,000 என்கிற உடனடி தள்ளுபடியை நீங்கள் பயன்படுத்தலாம்.
சியோமி பேட் 5 முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்பி விஷன் ஆதரவு உடனான 11-இன்ச் WQXGA டிஸ்பிளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட், 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 8720mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், சியோமி ஸ்மார்ட் பென் ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது.
சியோமி பேட் 6 அம்சங்கள்: இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 11 இன்ச் IPS LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஒப்பிலா பேட் டேப்லெட்டிலும் கூட இதே தான் உள்ளது. இதுதவிர்ததுசியோமி பேட் 6 ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் மற்றும் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்க்ளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications