Home
Tablets

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மி பேட் 5 என்ற டேப்லெட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை விட தனித்துவமான அம்சங்களுடன் இந்த சியோமி மி பேட் 5 மாடல் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5

வெளிவந்த தகவலின் அடிப்படையில், சியோமி மி பேட் 5 சாதனம் ஆனது 10.9-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய சியோமி மி பேட் 5 சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி பேட் 5 சாதனத்தில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர 5ஜி ஆதரவுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

மேலும் சியோமி மி பேட் 5 மாடலில் 8720 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த புதிய சாதனத்திற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் சியோமி மி பேட் 5 மாடலின் பின்புறம் மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. வெளிவந்த தகவலின்படி 12எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்களுடன் இந்த சாதனம் வெளிவரும். இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் சியோமி மி பேட் 5 சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5

சியோமி மி பேட் 5 மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

வைஃபை, என்எப்சி,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சியோமி மி பேட் 5 மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் அம்சங்கள் அருமையாக இருப்பதால் விலையும் சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Pad 5 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X