6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் களமிறங்கும் சியோமி மி பேட் 4.!

சியோமி மி பேட் 4 சாதனம் பொறுத்தவரை 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

தொடர்ந்து சியோமி நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய சாதனங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் சியோமி மி பேட் 4 சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மி பேட் 3 மாடல் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வெளிவரும் சியோமி மி பேட் 4 சாதனத்தில் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவருவதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 சியோமி மி பேட் 4:

சியோமி மி பேட் 4:

சியோமி மி பேட் 4 சாதனம் பொறுத்தவரை 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இக்கருவி வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன்:

ஸ்னாப்டிராகன்:

சியோமி மி பேட் 4 டேப்லெட் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும், அதன்பின்பு இப்போது உள்ள ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த டேப்லெட் சாதனம்.

 கேமரா:

கேமரா:

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இக்கருவி 12மெகாபிக்சல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதன்பின்பு அசத்தலான எல்இடி பிளாஷ் மற்றும் 5மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆதரவுடன் இக்கருவி வெளிவரும்.

பேட்டரி:

பேட்டரி:

சியோமி மி பேட் 4 டேப்லெட் மாடல் பொறுத்தவரை 6000எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சியோமி மி பேட் 3:

சியோமி மி பேட் 3:

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மி பேட் 3 மாடல் பொறுத்தவரை 7.9-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2048 x 1536பிக்சல் திர்மானம் கொண்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் 2.1ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி8176 செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
விலை:

விலை:

சியோமி மி பேட் 3 சாதனத்தில் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, வை-பை டிஸ்ப்ளே, வை-பை டைரக்ட், ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.14,139-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Pad 4 reported to be powered by Snapdragon 660 SoC, 6000mAh battery; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X