பட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.!
தற்போது சியோமி நிறுவனத்தின் செல்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் பல்வேறு போன்களையும் விதவிதமாக அறிமுகப்படும் வேளையில், சியோமி மி பேடு 4 பிளஸை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்திய சந்தையில் ஏராளமான செல்போன்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் வெளிநாடுகளை சேர்ந்த போன் நிறுவனங்களும் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியாவில் மக்கள் அதிக அடர்த்தி கொண்டுள்ளனர்.

இதனால் ஏராளமான பொது மக்களுக்கு செல்போன்களின் தேவை ஒரு புறம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஏராளமான வெளிநாட்டு போன்கள் குவிந்தாலும், சீனாவை சேர்ந்த செல்போன்கள் தான் அதிகம் மக்களிடம் விற்பனையாகிறது. இதற்கு இந்திய பொருளாதரம் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.

சீன நிறுவன போன்கள்:
சீன நிறுவனத்தின் போன்கள் விலை மிகவும் மலிவானதாகவும் இருக்கிறது. மேலும் அதில் ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது. இதனால் பொது மக்கள் இந்த சீன நிறுவனத்தின் போன்களை அதிகம் வாங்குகின்றனர்.
சீனாவை சேர்ந்த செல்போன் நிறுவனங்கள் மற்ற போன் நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவிற்கு புதிய தொழில் நுட்ப மற்றும் கவர்சிகரமான செல்போன்களை பொது மக்களுக்கு ஏற்றார் போல், வடிவமைத்து சந்தைப்படுத்துகின்றனர்.
இதில் சியோமி நிறுவனத்தின் படைப்புகள் தற்போது, ஐ போன் நிறுவனத்திற்கும் சாவல் விடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

சியோமி செல்போன்கள்:
தற்போது சியோமி நிறுவனத்தின் செல்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் பல்வேறு போன்களையும் விதவிதமாக அறிமுகப்படும் வேளையில், சியோமி மி பேடு 4 பிளஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

சியோமி மி பேடு 4 பிளஸ்:
சியோமி மி பேடு 4 பிளஸ் 10.1 இன்ச் ஹெச்எடி திரை அம்சம் கொண்டது. மேலும் 16:10 மற்றும் ரிசொல்யூசன் 1920 x 1200 pixels என்று பிக்சல் இருக்கிறது. இதில் பிங்கர் பிரிண்டர் செக்யூரிட்டியும் இருக்கின்றது.

8620 எம்ஏஹெச் பேட்டரி:
எம்ஐ பேடு 4ஐ ஸ்னாப்டிராகன் 660 புரோசஸர் உடன் 4 ஜிபி ரேமில் 64 ஜிபியும், 128 ஜிபி உள்ளடக் மெமரியை கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. இதன் போன் 8620 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

13 மெகா பிக்சல் கேமரா:
மி பேடு 4 பிளஸ் பின்புற கேமரா 14 மெகா பிக்சலையும் 5 மெகா பிக்சல் சென்சாரையும் கொண்டுள்ளது. அப்ரேச்சர் எப்/ 2.0 கொண்டுள்ளது.

விலை:
மி பேடு 4 பிளஸ் கோல்டு மற்றும் பிளாக் கலர்களில் கிடைக்கிறது. வைபை உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்களும் இதில் உள்ளன. மேலும் இதன் விலை சுமராக ரூ.19,300 முதல் 128 ஜிபி உள்ளடக்கம் கொண்ட போன் விலை சுமராக ரூ.21300 கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








