ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி பேட் 4.!
இந்த சியோமி மி பேட் 4 சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து டிவி, ஸ்மார்ட்போன் போன்ற பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வகையில் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் வரும் ஜூன் 25-ம் தேதி சியோமி மி பேட் 4 சாதனத்தை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சியோமி மி பேட் 4 சாதனம் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது, குறிப்பாக இதனுடன் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சியோமி மி பேட் 4 சாதனத்தை பற்றிய பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி பேட் 4 :
சியோமி மி பேட் 4 சாதனம் பொதுவாக 8-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் திர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த சாதனம் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
சியோமி மி பேட் 4 சாதனத்தில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த மி பேட் 4 சாதனம். குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த சாதனம்.

நினைவகம்:
இந்த சியோமி மி பேட் 4 சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பல்Nறு செயலிகளை இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

கேமரா:
இந்த மி பேட் 4 சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. கருப்பு, தங்கம், சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் மி பேட் 4 சாதனம்
கிடைக்கும்.

6000எம்ஏஎச்:
சியோமி மி பேட் 4 சாதனத்தில் 6000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications