2017 உலக டெவலப்பர் மாநாட்டில் நான்கு புதிய ஐபாட் டேப்ளெட்கள் அறிமுகமாகலாம்.!
இவைகள் அனைத்துமே ஐஎஸ் 10 கொண்டு இயங்கும் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளதகு. மேலும் அவைகள் மாடல் என் ஏ1670, ஏ1671, ஏ1701 மற்றும் ஏ1709 என்று பெயர் கொண்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்த உலக டெவலப்பர்கள் மாநாடு அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வழக்கமான மென்பொருள் அறிவிப்புகளுடன், நிறுவனம் சில முக்கிய வன்பொருள் அறிவிப்புகளை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு வெளியான தகவலின் கீழ் ஆப்பிள் நிறுவனம் அதன் ஸ்மார்ட் சிரி ஸ்பீக்கரை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது உடன் ஒரு 10.5 அங்குல ஐபேட் ப்ரோ ஒன்றையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்பொது வெளியாகியுள்ள ஒரு புதிய கசிவு படி, ஆப்பிள் நிறுவனம் மொத்தம் நான்கு ஐபாட் டேப்ளெட்களை இந்த ஆண்டின் டெவெலப்பர் மாநாட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளதக தெரிவிக்கிறது.
வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நான்கு ஐபாட் டேப்ளெட்களும் ஒரு பிரஞ்சு ஒழுங்குமுறை வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இவைகள் அனைத்துமே ஐஎஸ் 10 கொண்டு இயங்கும் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளதகு. மேலும் அவைகள் மாடல் என் ஏ1670, ஏ1671, ஏ1701 மற்றும் ஏ1709 என்று பெயர் கொண்டுள்ளன. ஆக முன்பு வெளியான தகவலில் பட்டியலிடப்பட்ட ஆப்பிள் வயர்லெஸ் கீபோர்ட் மற்றும் சில மேக்ஓஎஸ் சாதனங்களுடான் சேர்த்து ஆப்பிள் இந்த சாதனங்களை அறிமுகப்படுத்தலாம், மேலும் புதிய மேக்புக் மடிக்கணினிகளையும் அறிமுகப்படுத்தலாம்.
நீங்கள் கவனிதீர்கள் என்றால் வெளியான மாடல் எண்கள் ஜோடிகளாக இருக்கும் ஆக மேலும் இரண்டு புதிய ஐபாட் மாதிரிகள் தொடங்கப்படலாம். உடன்எ அவைகள் இரண்டு வகைகள் மட்டுமே - செல்லுலார் மற்றும் செல்லுலார் அல்லாத - என்ற விருப்பத்தேர்வுகள் மட்டுமே கொண்டிருக்கலாம்.
இன்னும் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து உறுதியான அறிவிப்பு இல்லை என்றாலும் கூட லீக்ஸ் தகவல்களின் படி ஒரு 10.5-அங்குல மற்றும் 12.9-அங்குல ஐபாட் ப்ரோ வெளியாகலாம். இந்த புதிய மாறுபாடு ஏற்கனவே உள்ள 9.7 அங்குல ஐபாட் ப்ரோவை விட சற்று உயரமாகவும், பரந்ததாகவும் இருப்பதுடன் மெல்லிய பெஸல்கள் கொண்ட ஒரு நேர்த்தியான வடிவமைப்பு கொண்டிருக்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. இப்போதுவரை சாதனம் பற்றி வேறு எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை.
ஆனால் சமீபத்திய வதந்திகள் அந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும், மைக், மற்றும் மெய்நிகர் முகப்பு பட்டன் ஆகியவற்றை பரிந்துரைக்கின்றன. 12.9 இன்ச் ஐபாட் ப்ரோ ஸ்பெக் மற்றும் ஹார்டுவேர் மேம்பாடுகளை பெறும், சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபாட் டேப்ளெட்களுடன் இணைந்து, ஆப்பிள் அதன் ஆப்பிள் பென்சில் 2 சாதனத்தையும் அறிமுகம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications