விவோ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல்.! எப்போது அறிமுகம் தெரியுமா?
விவோ நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை அடுத்த ஆண்டு துவகத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களை விட தனித்துவமான அம்சங்களுடன் விவோ நிறுவனத்தின் டேப்லெட் மாடல்
வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவோ நிறுவனத்தின் துணை நர்வாக தலைவரான ஹு பைஷான் அண்மையில் விவோ டேப்லெட் விற்பனைக்கு வரவுள்ளதாக உறுதி செய்தார். ஆனால் இதுகுறித்த கூடுதலான விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும் விவோ பேட் என்ற பெயரில் புதிய டேப்லெட் மாடல் வெளிவரும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதேபோல் விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான iQOO நிறுவனமும் புதிய டேப்லெட் மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாம்சங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக விவோ டேப்லெட் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விவோ டேப்லெட் மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் விவோ நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த விவோ Y21 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

விவோY21 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. விவோ Y21 ஸ்மார்ட்போனின்
பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
புதிய விவோY21 ஸ்மார்ட்போனில் எப்போதும் போல மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் FunTouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ Y21 ஸ்மார்ட்போன். விவோ Y21 ஸ்மார்ட்போனில்
5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட்டுகள், 4ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y21 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,490-ஆக உள்ளது.
விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் விவோ நிறுவனத்தின் டேப்லெட் மாடல்களுக்கும் அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications