Home
Tablets

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்,8040 எம்ஏஎச் பேட்டரி, 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் விவோ பேட் அறிமுகம்.!

விவோ நிறுவனம் புதிய விவோ பேட் எனும் டேப்லெட் சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த விவோ டேப்லெட் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ பேட் சாதனம் ஆன

புதிய விவோ பேட் சாதனம் ஆனது 11-இன்ச் 2.5கே WQXGA வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2560×1600 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன்இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ பேட் சாதனத்தில் தரமான 7என்எம்

விவோ பேட் சாதனத்தில் தரமான 7என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வதியுடன் அட்ரினோ 650 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல்.

விவோ பேட் சாதனம் ஆனது 8ஜிபி ரேம்

இந்த விவோ பேட் சாதனம் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம்கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

வோ பேட் சாதனத்தின் பின்புறம் 13எம்பி

விவோ பேட் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆதரவு உள்ளது. அதேபோல் 4கே வீடியோ பதிவு செய்யும் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவு
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

 சாதனத்தில் 8040 எம்ஏஎச்

இந்த புதிய விவோ பேட் சாதனத்தில் 8040 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் சாதனம். நான்கு ஸ்பீக்கர்களுடன் டால்பி அட்மோஸிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ பேட், ஆனால் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இல்லை.

 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி மற்றும்

வைஃபை 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி மற்றும் என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான விவோ பேட். மேலும் இந்த சாதனத்தின் எடை 489 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ பேட் விலை CNY 2,499 (இந்திய மதிப்பில் ரூ.29,800), பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியண்டின் விலை CNY 2,999(இந்திய மதிப்பில் ரூ.35,700).

Best Mobiles in India

English summary
Vivo Pad with Snapdragon 870 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X