Home
Tablets

வாரி தூக்கும் பட்ஜெட்.. ரூ.20,000 போதும்.. 12GB ரேம்.. 8500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?

ரூ.40,000 மதிப்புள்ள லேப்டாப்புக்கு நிகரான 12ஜிபி ரேம், 8500mAh பேட்டரி, 44W சார்ஜிங், ஆண்ட்ராய்டு 13, அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்டிருந்தும் பட்ஜெட் விலைக்கு விவோ பேட் ஏர் (Vivo Pad Air) டேப்லெட் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன், லேப்டாப்களை போலவே, டேப்லெட்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் ஸ்மார்ட்போனை கொடுப்பதைவிட டேப்லெட் கொடுப்பதே நல்லது என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். இதனாலேயே, டேப்லெட் மார்கெட்டும் தனி இடம் பிடித்துவிட்டது. ஆகவே, கம்மியான பட்ஜெட்டில் அட்டகாசமான அம்சங்களுடன் டேப்லெட்கள் விற்பனைக்கு வருகின்றன.

ரூ.20,000 பட்ஜெட்.. 12GB ரேம்.. 8500mAh பேட்டரி.. எந்த மாடல்?

அந்த வரிசையில், விவோ (Vivo) நிறுவனத்தின் விவோ பேட் ஏர் டேப்லெட் பட்ஜெட் விலையில் லேப்டாப்புக்கு நிகரான அம்சங்களுடன் பின்னி எடுக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் போன்ற நல்ல நல்ல அம்சங்கள் கொண்டிருக்கிறது. இந்த லேப்லெட்டின் முழு அம்சங்கள், விலை பட்டியல், விற்பனை தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

விவோ பேட் ஏர் அம்சங்கள் (Vivo Pad Air Specifications): இந்த டேப்லெட் 11.5 இன்ச் (2800 × 1840 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 2.8K ரெசொலூஷன், 90Hz/120Hz/144Hz வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate), எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஆர்ஜின்ஓஎஸ் 3 (OriginOS 3) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 7என்எம் (Octa Core Qualcomm Snapdragon 870 7nm) சிப்செட் வருகிறது. அதோடு, அட்ரினோ 650 ஜிபியு (Adreno 650 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த விவோ பேட் ஏர் டேப்லெட் 4 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. அந்த வகையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் உள்ளன.

இந்த டேப்லெட் 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இதில் பிரம்மாண்ட அம்சமாக 8500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் 259.73 மிமீ நீளம், 176 மிமீ அகலம், 6.67 மிமீ தடிமன் கொண்டுள்ளது.

பேட்டரி உடன் சேர்த்து 530 கிராம் எடைக் கொண்டுள்ளது. மேலும், டைப் - சி ஆடியோ மற்றும் சார்ஜிங் போர்ட், குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers), ப்ளூடூத் 5.2 மற்றும் வை-பை 6 கனெக்டிவிட்டி, என்ஃஎப்சி (NFC) உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவோ பேட் ஏர் டேப்லெட் ஃப்ரீ ப்ளூ (Free Blue), பிரேவ் பிங்க் (Brave Pink), ஈஸி சில்வர் (Easy Silver) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,595 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,315 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,750 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். முதலில் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Pad Air with 12GB RAM, Snapdragon 870, 8500mAh Battery Sale From August 18 Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X