Home
Tablets

அறிமுகமானது புதிய விவோ டேப்லெட்.. 4K டிஸ்பிளே.. 13000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ பேட் 6 ப்ரோ (Vivo Pad 6 Pro) மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் உலக சந்தையிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய விவோ டேப்லெட் மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ பேட் 6 ப்ரோ அம்சங்கள் (Vivo Pad 6 Pro Specifications): 13.2-இன்ச் 4கே டிஸ்பிளே உடன் இந்த விவோ பேட் 6 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 540Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர் சப்போர்ட், பி3 வைடு கலர் காமட், டிசி டிம்மிங், 3840 x 2512 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புதிய விவோ டேப்லெட்.. 4K டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?

இந்த புதிய விவோ டேப்லெட் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) உடன் வெளியாகி உள்ளது குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை விவோ பேட் 6 ப்ரோ மாடலில் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் இந்த விவோ டேப்லெட் மாடலில் கேமிங் பயனர்களை கவரும் வகையில் VC கூலிங் சிஸ்டம் ஆதரவும் உள்ளது. ப்ளூ ரிவர் ஸ்மூத் இன்ஜின் மூலம் மேம்படுத்தப்பட்ட ஆரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மூலம் விவோ பேட் 6 ப்ரோ மாடல் இயங்குகிறது. வீடியோ எடிட்டிங், அலுவலகப் பணிகள் என அனைத்திற்கும் இந்த டேப்லெட் மாடலை பயன்படுத்த முடியும்.

13எம்பி ரியர் கேமரா உடன் விவோ பேட் 6 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 4கே வீடியோ பதிவு செய்யும். மேலும் நைட் மோடு, டாக்குமெண்ட் ஸ்கேனிங், மற்றும் புரொஃபஷனல் மோடு போன்ற கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது.

சூப்பர் ஆடியோ 7.0 ஸ்பேஷியல் எஃபெக்ட்களுடன் (Super Audio 7.0 spatial effects) கூடிய 8 ஸ்பீக்கர் பனோரமிக் சிஸ்டம் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே விவோ பேட் 6 ப்ரோ டேப்டெல் ஆனது சிறந்த அடியோ அனுபவத்தை வழங்கும்.

இந்த விவோ பேட் 6 ப்ரோ டேப்லெட் 19 கேம்களுக்கான சூப்பர்-ரெசல்யூஷன், ஃபிரேம் இன்டர்போலேஷன் மற்றும் லைவ் ஸ்கிரீன்ஷாட்கள் போன்ற கேமிங் அம்சங்களை வழங்குகிறது. மேலும் வைஃபை 6இ, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி 3.2 ஜென் 1, ஒடிஜி போன்ற பல கனெகடிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. ஸ்மார்ட் டச் கீபோர்டு 6 ப்ரோ மற்றும் விவோ பென்சில் 3 போன்ற சாதனங்களுடன் இந்த விவோ டேப்லெட் வெளியாகி உள்ளது.

அறிமுகமானது புதிய விவோ டேப்லெட்.. 4K டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?

13000mAh பேட்டரி உடன் விவோ பேட் 6 ப்ரோ மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ பேட் 6 ப்ரோ விலை
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ பேட் 6 ப்ரோ மாடலின் விலை 4,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.61,380)
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ பேட் 6 ப்ரோ மாடலின் விலை 4,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.68,202)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ பேட் 6 ப்ரோ மாடலின் விலை 6,699 yuan (இந்திய மதிப்பில் ரூ.91,415)

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Pad 6 Pro with 13000mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X