Home
Tablets

புதிய டேப்லெட் அறிமுகம் செய்த Vivo.. 10000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ பேட் 5 (vivo Pad 5) எனும் டேப்லெட் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் ஆனது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது விவோ பேட் 5 மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ பேட் 5 அம்சங்கள் (vivo Pad 5 Specifications): 12.1-இன்ச் 2.8கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3096×2064 பிக்சல்ஸ், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

புதிய டேப்லெட் அறிமுகம் செய்த Vivo.. 10000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9300 பிளஸ் 4என்எம் (Octa-Core Dimensity 9300+ 4nm) சிப்செட் உடன் விவோ பேட் 5 அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இதில் இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis-G720 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு உள்ளது.

ஓர்ஜின்ஓஎஸ்5 (OriginOS 5) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் விவோ பேட் 5 மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.

எல்இடி பிளாஸ் ஆதரவுடன் 8எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது இந்த விவோ பேட் 5 மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் 6 ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் விவோ பேட் 5 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக விவோ பேட் 5 மாடலின் எடை 590 கிராம் ஆகும்.

10000mAh பேட்டரி உடன் விவோ பேட் 5 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ (Blue), கிரே (Grey), பிங்க் (Pink) நிறங்களில் விவோ பேட் 5 மாடல் விற்பனைக்கு வரும். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை 2499 yuan (இந்திய மதிப்பில் ரூ.29,635) ஆகும். குறிப்பாக ஜூன் 6 முதல் சீனாவில் இந்த புதிய விவோ டேப்லெட் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo Pad 5 launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X