வாரி தூக்கும் பட்ஜெட்.. Dimensity சிப்செட்.. பெரிய டிஸ்பிளே.. களமிறங்கும் புதிய Vivo டேப்லெட்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ பேட் 3 மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய விவோ டேப்லெட் ஆனது வரும் வாரங்களில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவோ பேட் 3 (Vivo Pad 3) மாடலின் சில முக்கியமான விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் (MediaTek Dimensity 9300) வசதியுடன் இந்த விவோ பேட் 3 மாடல் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த புதிய விவோ டேப்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ பேட் 3 மாடல் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட சிங்கிள் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் ரூ.20,000-க்கு கீழ் விவோ பேட் 3 மாடல் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த விவோ பேட் 3 மாடலின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ பேட் 2 மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம். விவோ பேட் 2 மாடல் ஆனது அலுமினியம் பாடி கொண்டுள்ளது. 3.05ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9000 4என்எம் சிப்செட் உடன் மாலி-ஜி70 10-கோர் ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ பேட்2 மாடல்.
12.1-இன்ச் 2.8கே எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ பேட் 2 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 2800×1968 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. ழுசபைைெழுளு 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டேப்லெட். ஆனாலும் விவோ பேட் 2 மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த அட்டகாசமான விவோ பேட் 2 வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். அதேபோல கிரே, பர்பிள், ப்ளூ, போன்ற நிறங்களில் இந்த விவோ பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

விவோ பேட் 2 மாடல் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ பேட் 2 மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
10000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இதுதவிர 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். இதுதவிர யுஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








