சூப்பரான டிஸ்பிளே வசதியுடன் களமிறங்கும் கூகுள் பிக்சல் டேப்லெட்.!
கூகுள் நிறுவனம் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களை வரும் அக்டோபர் 6-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்நிறுவனம் கூகுள் பிக்சல் டேப்லெட் மாடலை தயார்ப்படுத்துவது போல் தெரிகிறது.

கூகுள் பிக்சல் டேப்லெட்
அதாவது இந்த புதிய கூகுள் பிக்சல் டேப்லெட் மாடலின் அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. அதேபோல் இந்த புதிய டேப்லெட் அடுத்த வருடம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதன் சரியான வெளியீட்டு தேதி இன்னும் கிடைக்கவில்லை.

பெரிய டிஸ்பிளே
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த கூகுள் பிக்சல் டேப்லெட் ஆனது 10.9-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வைஃபை 6
இந்த புதிய கூகுள் டேப்லெட் மாடல் ஆனது 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வைஃபை 6, ஜிபிஎஸ் ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் டேப்லெட் மாடல்.
குறிப்பாக கூகுள் பிக்சல் டேப்லெட் மாடல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட்மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
அதேபோல் கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7 ப்ரோ
கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஆகியவை 2வது தலைமுறை டென்சர் சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போன்கள் இரண்டும் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 13 OS
இந்த போன்களில் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் விருப்பம் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. இதனால், கூடுதல் ஸ்டோரேஜை உங்களால் விரிவாக்க முடியாது. Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன்கள் கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய ஆண்ட்ராய்டு 13 OS உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro
Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் வடிவமைப்பு பற்றிப் பேசுகையில், இதன் முன் பகுதி கூகுள் பிக்சல் 6 போலவே உள்ளது. ஆனால், பின்புற கேமரா அமைப்பு ஒரு சிறிய வடிவமைப்பு மாற்றத்துடன் வருகிறது. குறிப்பாக கூகுள் பிக்சல் 7 ப்ரோ மாடல் QHD+ 120Hz பேனலைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7 ப்ரோ மாடல் சாம்சங் சென்சார் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல்இந்த போன்கள் 12மெகாபிக்சல் செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications