இந்தியாவில் வாங்க கிடைக்கும் தலைசிறந்த டேப்லெட்கள்.!
கின்டிள் டேப்லெட்களில் பல்வேறு வெர்ஷன்கள் இருக்கின்றன. இவற்றின் பேஸ் மாடல் விலை ரூ.5,999 முதல் துவங்குகிறது.
இந்தியாவில் டேப்லெட் சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன் அல்லது மற்ற காரணங்களை எடுத்துக் கொண்டாலும் டேப்லெட் விற்பனை சமீப காலங்களில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில்லை என்பதே உண்மை.
விற்பனை சரிவில் இருப்பதை வைத்து டேப்லெட்களை பலரும் வாங்குவதில்லை என கூறிவிட முடியாது. இன்றும் பலர் டேப்லெட் வாங்கி பயன்படுத்த திட்டமிட்டிருப்பர். புத்தகங்களை வாசிக்கவும், கேமிங் அல்லது பிரவுசிங் என பலவற்றுக்கும் டேப்லெட் தேவைப்படுகிறது.
அந்த வகையில் நீங்களும் டேப்லெட் ஒன்றை வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 டேப்லெட்களின் பட்டியலைத் தொடர்ந்து பார்ப்போம்.

ஆப்பிள் ஐபேட் (6th Gen)
ஆப்பிள் நிறுவனம் பல்வேறு டேப்லெட் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. விலை மிகவும் அதிகமாகவும், அதே சமயம் சற்றே புதிய மாடலாக வாங்கும் வேண்டும் என்போருக்கு ஆப்பிள் ஐபேட் (6th Gen) சிறப்பானதாக இருக்கும்.
32 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவித மெமரி அளவுகளில் கிடைக்கும் இந்த டேப்லெட் வைபை மற்றும் 4ஜி வெர்ஷன்களும் கிடைக்கிறது. 32 ஜிபி வைபை மாடலின் விலை ரூ.28,000, 4 ஜி மாடல் ரூ.35,700, 128 ஜிபி வைபை மாடல் ரூ.38,600 மற்றும் 4ஜி எல்டிஇ மாடல் ரூ.46,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 6th Gen ஐபேட் மாடலில் ஃபியூஷன் சிப்செட், 9.7 இன்ச் ஸ்கிரீன், டச் ஐடி கைரேகை சென்சார், 8 எம்பி பிரைமரி கேமரா, ஃபேஸ் ஐடி செல்ஃபி கேமரா மற்றும் 10 மணி நேர பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் டேப் எஸ்3
இந்தியாவில் ரூ.47,990 விலையில் விற்பனை செய்யப்படும் சாம்சங் டேப் எஸ்3 மாடலில் நான்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆட்டோமேடிக் ஸ்கிரீன் ஓரியன்டேஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. ஹார்டுவேர் அம்சங்களை பொருத்த வரை இந்த டேப்லெட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர், 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம், 6000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.

கின்டிள் ஒயாசிஸ் 7
கின்டிள் டேப்லெட்களில் பல்வேறு வெர்ஷன்கள் இருக்கின்றன. இவற்றின் பேஸ் மாடல் விலை ரூ.5,999 முதல் துவங்குகிறது. கின்டிள் ஒயாசிஸ் 8 ஜிபி வைபை மாடல் ரூ.21,999 மற்றும் வைபை + 3ஜி 32 ஜிபி மாடல் விலை ரூ.28,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கின்டிள் ஒயாசிஸ் மாடலில் 7 இன்ச் டிஸ்ப்ளே, IPX8 வாட்டர் ப்ரூஃப், வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் வயர்லெஸ் ஸ்பீக்கர்களில் ப்ளூடூத் மூலம் இணைத்து பயன்படுத்தலாம். இ-ரீடர் மாடலில் 30,000-க்கும் அதிகமான இலவச இபுக் மற்றும் 20 லட்சம் இபுக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் ரூ.149 மாத கட்டணத்தில் சுமார் பத்து லட்சம் இபுக்-களை வழங்குவதாக அமேசான் தெரிவித்துள்ளது. புத்தம் புதிய கின்டிள் ஒயாசிஸ் 8 ஜிபி மெமரி கொண்டிருக்கும் நிலையில் இரண்டாம் தலைமுறை ஒயாசிஸ் 32 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ப்ளெக்ஸ்
குறைந்த விலையில் வாங்க பல்வேறு மாடல்கள் கிடைக்கின்றன, அவற்றில் சிறந்ததை தேர்வு செய்வது கடினமான காரியமாகும். சாம்சங், லெனோவோ மற்றும் ஐபால் நிறுவனங்கள் வழங்கும் நல்ல டேப்லெட்கள் கிடைக்கும் நிலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தையும் இந்த பட்டியலில் சேர்த்து கொள்ள முடியும்.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ப்ளெக்ஸ் இந்தியாவில் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 8 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, குவாட்கோர் மீடியாடெக் MT8382 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம் கொண்டு இயங்கும் டேப்லெட் 3000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.


லெனோவோ மிக்ஸ்
இந்தியாவில் ரூ.18,000 விலையில் கிடைக்கும் லெனோவோ மிக்ஸ் கழற்றக்கூடிய கீபோர்டு கொண்டிருப்பதால், இதனை லேப்டாப் போன்றும் பயன்படுத்த முடியும். மிக்ஸ் 320 மாடலில் விண்டோஸ் 10 இயங்குதளம், 2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்ஃபி கேமரா, யுஎஸ்பி டைப்-சி போர்ட், இரண்டு யுஎஸ்பி 2.0 போர்ட், வைபை மற்றும் ப்ளூடூத் 4.1 கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications