2022 இல் வாங்கச் சிறந்த டாப் 5 டேப்லெட் மாடல்கள்: மாணவர்கள் மிஸ்' பண்ணிடாதீங்க!

|

குழந்தைகள் படிப்பது முதல் பாடல் கேட்பது வரை பல தேவைகளுக்கு பயன்படுகிறது டேப்லெட். அதாவது இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை விட டேப்லெட் மாடல்களுக்கு தான் இப்போது அதிக வரவேற்பு உள்ளது.

டேப்லெட்

டேப்லெட்

அதேபோல் அலுவலக வேலை, படிப்பு, வீடியோ அழைப்பு மற்றும் சிறந்த பொழுதுபோக்கிற்கும் தற்போது அதிகமாக பயன்படுவது டேப்லெட் தான். மேலும் சிலர் கனமான மற்றும் சிரமமான லேப்டாப் மாடல்களை பயன்படுத்துவதை தவிர்த்து டேப்லெட் மாடல்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

மேலும் தற்போது இந்தியச் சந்தையில் வாங்கச் சிறந்த டாப் 5 டேப்லெட் மாடல்களை இப்போது பார்ப்போம்.கண்டிப்பாக இந்த டேப்லெட் மாடல்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

 5.நோக்கியா டி20 டேப்

5.நோக்கியா டி20 டேப்

நோக்கியா டி20 டேப்லெட் ஆனது தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்த நோக்கியா டேப்லெட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.17,970-விலையில் வாங்க முடியும். மேலும். 10.4 இன்ச் 2 கே எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா டி20 டேப்லெட்.

குறிப்பாக 2,000 X 1,200 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், யூனிசாக் டி 610 ப்ராசஸர் மற்றும் மாலி-ஜி 52 ஜிபியு ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், பவர் அம்ப்ளிஃபையர், டூயல் மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்தநோக்கியா டி20 டேப்

நோக்கியா டி20 டேப்லெட் பேட்டரி

நோக்கியா டி20 டேப்லெட் பேட்டரி

நோக்கியா டி20 டேப்லெட் ஆனது 8200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா போன்ற தரமான வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா டேப்.

உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?

4.சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

4.சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.24,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 10.4-இன்ச் WUXGA TFT டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 2000 × 1200 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த
பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.

இந்த சாமசங் டேப்லெட் மாடலில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலில் 7040எம்ஏஎச் பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக் அப் கிடைக்கும். இதுதவிர வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் டேப்லெட்.

3.ஆப்பிள் ஐபேட் ஏர்

3.ஆப்பிள் ஐபேட் ஏர்

6ஜிபி ஸ்டோரேஜ் (வைஃபை) கொண்ட ஆப்பிள் ஐபேட் ஏர் மாடலை அமேசான் தளத்தில் ரூ.52,090-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப் 10.9-இன்ச் Liquid Retina டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் சக்தி வாய்ந்த ஆப்பிள் எம்1 சிப் (Neural Engine) உள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் ஐபேட் ஏர் கேமரா

ஆப்பிள் ஐபேட் ஏர் கேமரா

ஆப்பிள் ஐபேட் ஏர் ஆனது 12எம்பி வைடு ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி அல்ட்ரா வைடு கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஆப்பிள் டேப்லெட். மேலும் ஸ்டீரியோ லேண்ட்ஸ்கேப் ஸ்பீக்கர்கள், மேஜிக் கீபோர்டு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஆப்பிள் ஐபேட் ஏர் மாடல்.

2.லெனோவா டேப் பி11

2.லெனோவா டேப் பி11

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட லெனோவா டேப் பி11 மாடலை அமேசான் தளத்தில் ரூ.21,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஸ்மார்ட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட
பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

அதேபோல் இந்த டேப்லெட் 11-இன்ச் TDDI IPS டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2000*1200 ரெசல்யூசன், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 மாடல்.

லெனோவா டேப் பி11 கேமரா

லெனோவா டேப் பி11 கேமரா

லெனோவா டேப் பி11 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளது. பின்பு 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 7500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப் பி11 மாடல்.

 1.எம்ஐ பேட் 5

1.எம்ஐ பேட் 5

சியோமி நிறுவனத்தின் எம்ஐ பேட் 5 சாதனத்தை அமேசான் தளத்தில் ரூ.28,998-விலையில் வாங்க முடியும். சியோமி பேட் 5 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட் ஆதரவோடு வருகிறது. இது பெரிய பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. அது 8720 எம்ஏஎச் பேட்டரி ஆகும்.

எம்ஐ பேட் 5 ஆனது 10.95 இன்ச் டபிள்யூ க்யூஎச்டி ப்ளஸ் எல்சிடி 10 பிட் ட்ரூ கலர் டிஸ்ப்ளே உடன் வருகிறது. பின்பு 2560×1600 பிக்சல் தீர்மானம், 650 நிட்ஸ் பிரகாச ஆதரவோடு வருகிறது. டால்பி விஷன், டால்பி 12 ஹெர்ட்ஸ் ரேட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது இந்த டேப்லெட்.

எம்ஐ பேட் 5 கேமரா

எம்ஐ பேட் 5 கேமரா

சியோமி டேப்லெட் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த டேப்லெட் 1080 பிக்சல் ஃபுல் எச்டி ப்ளஸ் வீடியோ பதிவு செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த எம்ஐ பேட் 5.

Best Mobiles in India

English summary
Top 5 Best Tablets to Buy in India: Here's the List: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X