TCL அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 8000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?
டிசிஎல் நிறுவனம் தனது புதிய என்எக்ஸ்டிபேப்பர் 11 பிளஸ் (Nxtpaper 11 Plus) டேப்லெட் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் ஆனது அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய என்எக்ஸ்டிபேப்பர் 11 பிளஸ் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
டிசிஎல் என்எக்ஸ்டிபேப்பர் 11 பிளஸ் அம்சங்கள் (TCL Nxtpaper 11 Plus Specifications): 11.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய டிசிஎல் என்எக்ஸ்டிபேப்பர் 11 பிளஸ் மாடல் வெளிவந்துள்ளது மேலும் 2.2கே ரெசல்யூஷன்(2.2K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3:2 16:9 அஸ்பெக்ட் ரேசியோ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி100 பிராசஸர் (MediaTek Helio G100 processor) உடன் இந்த புதிய டிசிஎல் என்எக்ஸ்டிபேப்பர் 11 பிளஸ் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆக்டா-கோர் சிபியு (octa-core CPU) ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. எனவே அனைத்து ஆப்களையும் இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த டிசிஎல் என்எக்ஸ்டிபேப்பர் 11 பிளஸ் டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு DTS 3D பூம் சவுண்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் உடன் இந்த டிசிஎல் டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய டிசிஎல் என்எக்ஸ்டிபேப்பர் 11 பிளஸ் டேப்லெட் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் மூலம் 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு செய்ய முடியும்.
8000mAh பேட்டரி உடன் டிசிஎல் என்எக்ஸ்டிபேப்பர் 11 பிளஸ் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ( 33W fast charging) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வைஃபை 5, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அதேபோல் டிசிஎல் என்எக்ஸ்டிபேப்பர் 11 பிளஸ் மாடலின் எடை 490 கிராம் ஆகும். ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) நிறத்தில் இந்த புதிய டிசிஎல் சாதனத்தை வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் டிசிஎல் என்எக்ஸ்டிபேப்பர் 11 பிளஸ் மாடலின் விலை $249 (இந்திய மதிப்பில் ரூ.21,286) ஆக உள்ளது. விரைவில் இந்த டிசிஎல் டேப்லெட் ஆனது அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








