கலக்குற சந்துரு! ஒருபக்கம் ஸ்டைலஸ்.. மறுபக்கம் LED டிஸ்பிளே! மாஸ் காட்டும் Samsung-ன் புது டேப்லெட்!

|

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 எப்இ எனும் டேப்லெட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும்.

கேலக்ஸி டேப் எஸ்8 எப்இ

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 எப்இ மாடல் எண் SM-X506B என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கீக்பெஞ்சில் தளத்தில் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 எப்இ மாடலின் அம்சங்கள் வெளிவந்துள்ளது.

ஓஹோ.. இது தான் விஷயமா! லேப்டாப் வழியாக WhatsApp Call செய்ய முடியுமா? ஆம் என்றால் அதை செய்வது எப்படி?ஓஹோ.. இது தான் விஷயமா! லேப்டாப் வழியாக WhatsApp Call செய்ய முடியுமா? ஆம் என்றால் அதை செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு 13

ஆண்ட்ராய்டு 13

அதாவது மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 எப்இ மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய டேப்லெட் மாடல் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2.. இந்த தேதியை நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க! லேட்டஸ்ட் 5G சிப்செட் உடன் ஒரு புது போன் வருது!டிசம்பர் 2.. இந்த தேதியை நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க! லேட்டஸ்ட் 5G சிப்செட் உடன் ஒரு புது போன் வருது!

128ஜிபி ஸ்டோரேஜ் வசதி

128ஜிபி ஸ்டோரேஜ் வசதி

குறிப்பாக இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 எப்இ மாடல் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!

ஸ்டைலஸ் சப்போர்ட்

ஸ்டைலஸ் சப்போர்ட்

அதேபோல் 13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் இந்த டேப்லெட் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்சிடி டிஸ்பிளே, ஸ்டைலஸ் சப்போர்ட்,Wi-Fi, நீண்ட நேரம் பேக்கப் கொடுக்கும் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய சாம்சங் டேப்லெட் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

சைலண்டா சம்பவம் செய்த Vivo: 12ஜிபி ரேம் உடன் கம்மி விலையில் அறிமுகமான ஸ்பெஷல் எடிஷன் போன்!சைலண்டா சம்பவம் செய்த Vivo: 12ஜிபி ரேம் உடன் கம்மி விலையில் அறிமுகமான ஸ்பெஷல் எடிஷன் போன்!

 சாம்சங் கேலக்ஸி ஏ04இ

சாம்சங் கேலக்ஸி ஏ04இ

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

பிரமிக்க வைக்கும் மூன்று 5G போன்கள் அறிமுகம்: எவ்வளவு அழகு.. அசத்திய Vivo நிறுவனம்.! எப்போது விற்பனை?பிரமிக்க வைக்கும் மூன்று 5G போன்கள் அறிமுகம்: எவ்வளவு அழகு.. அசத்திய Vivo நிறுவனம்.! எப்போது விற்பனை?

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ04இ போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஃபேஸ் அன்லாக் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் One UI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung to launch Next Tablet with Stylus Support check details of Galaxy Tab S8 FE : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X