ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் வசதியுடன் கேலக்ஸி புக்2 அறிமுகம்.!
இந்த டேப்லெட் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வகையில் கேலக்ஸி டேப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் கீபோர்டு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இந்த சாதனம்.

மற்ற சாதனங்களை விட சாம்சங் கேல்க்ஸி கேலக்ஸி புக்2 சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனத்தை மிக எளிமையாக அனைத்து இடங்களுக்கு எடுத்து சென்று பயன்படுத்த முடியும், அதாவது கணினி மற்றும் டேப்லெட் என்ற இருவேறு முகங்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேல்க்ஸி கேலக்ஸி புக்2 :
சாம்சங் கேல்க்ஸி கேலக்ஸி புக்2 பொதுவாக 12-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1440 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 850 சிப்செட்:
இக்கருவி குவால்காம் 2.96ஜிகாஹெர்ட் கோர் பிளஸ் குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ் கோர் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் வசதியைக்
கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இவற்றுள் ஸ்னாப்டிராகன் எக்ஸ்20 எல்டிஇ மோடம் வசதி அடக்கம்.

சேமிப்பு:
இந்த டேப்லெட் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ளது, மேலும் வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விலை:
இந்த சாதனம் வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் கேல்க்ஸி கேலக்ஸி புக்2 விலைப் பொறுத்தவரை ரூ.73,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications