இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. ரூ.17,000 கம்மி ரேட்ல Samsung டேப்லெட்.. 8400mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிரீமியம் பீச்சர்களுடன் டேப்லெட் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 (Samsung Galaxy Tab S9) மாடல் பக்காவாக இருக்கும். வை-பை வேரியண்ட்டாக கிடைக்கும் இந்த டேப்லெட்டில் 8400mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. விலை, டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.63,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.17,000 டிஸ்கவுண்ட் கிடைக்க இருக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,200 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

இந்த விலை மற்றும் டிஸ்கவுண்ட் போக வாங்க வேண்டுமானால், ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 (Flipkart Big Billion Days 2026) என்னும் சிறப்பு விற்பனைக்கு காத்திருக்க வேண்டும். வருகிற அக்டோபர் 9ஆம் தேதி இந்த விற்பனை தொடங்க இருக்கிறது. நேரடியாக ரூ.17,000 டிஸ்கவுண்ட் கிடைப்பதால், எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இது கிட்டத்தட்ட பிரீமியம் செக்மெண்ட்டில் வெளியாகி இருப்பதால், பீச்சர்களும் அதற்கு ஏற்ப பட்டையை கிளப்பும்படி இருக்கின்றன. அமோலெட் டிஸ்பிளே முதல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வரையில் பக்காவாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எஸ் பென் சப்போர்ட் கிடைப்பதால், பயன்படுத்த எளிதாக இருக்கும். முழு பீச்சர்களை பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அம்சங்கள் (Samsung Galaxy Tab S9 Specifications): ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 மாடல் கொடுக்கிறது. செக்யூரிட்டிக்கு சாம்சங் கிநாக்ஸ் (Samsung Knox) உள்ளிட்ட பீச்சர்களுடன் ஒன் யுஐ 5.1.1 (One UI 5.1.1) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 11 இன்ச் டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 மாடல் கொடுக்கிறது. ஆகவே, பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை பெற்று கொள்ளலாம். 2K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற மாடலாகவும் இருக்கிறது.
13 எம்பி ரியர் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கா 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 கொடுத்து இருக்கிறது. டிஸ்பிளேவுக்கு ஏற்ப குவாட் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Quad Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன.
4 ஸ்பீக்கர்கள் கிடைப்பதால், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக ஏகேஜி ஆடியோ (AKG Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஸ் பென் (S Pen) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 கிடைக்கிறது. மேலும், எஸ் பென் கிரியேட்டர் எடிஷன் புக் கவர் கீபோர்ட் பயன்படுத்தி கொள்ளலாம்.
IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 மாடலில் 8400mAh பேட்டரி கிடைக்கிறது. பெய்ஜ் (Beige) மற்றும் கிராஃபைட் (Graphite) கலர்களில் கிடைக்கிறது. வை-பை 6இ, ப்ளூடூத் வி5.3 உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை கொடுத்து இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications
