அவசரப்பட்டு இப்பவே டேப்லெட் வாங்காதீங்க.! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வருது தரமான Samsung டேப்லெட்.!
சியோமி டேப்லெட் மாடல்களை சாம்சங் நிறுவனத்தின் டேப்லெட் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் சாம்சங் டேப்லெட் மாடல்கள் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் புதிய டேப்லெட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம்.
கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா: அதாவது சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா மாடலை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா எனும் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய டேப்லெட் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த டேப்லெட் மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, புதிய கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா மாடல் ஆனது அதன் முந்தைய வெர்ஷனை விட 11 கிராம் எடை அதிகரித்து இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு IP சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டு இந்த புதிய சாம்சங் டேப்லெட் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா மாடலில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இதில் தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு 16ஜிபி ரேம் வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா மாடல் வெளிவரும்.
14.6-இன்ச் WQXGA+ AMOLED டிஸ்பிளே வசதியை கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா மாடல் அறிமுகமாகும். பின்பு 2960x1848 பிக்சல் ரெல்யூஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் டேப்லெட் மாடல். எஸ் பென் சப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஏகேஜி டியுன் செய்த ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் டேப்லெட் மாடல்.

புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா மாடல் 11200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் டேப்லெட் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். 50எம்பி பிரைமரி கேமரா சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.
எக்ஸிநோஸ் 1330 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய
ஸ்மார்ட்போன் மாடல்.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்எபி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த
போன். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
image courtesy: IceUniverse/Twitter


Click it and Unblock the Notifications








