12எம்பி டூயல் செல்பி கேமரா, 12.4-இன்ச் டிஸ்பிளே: அறிமுகமானது Samsung கேலக்ஸி டேப் எஸ்9 சீரிஸ்.! என்ன விலை?
சாம்சங் நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான இரண்டாவது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு (Galaxy Unpacked Event) இன்று (26-7-2023) நடைபெற்றது. இந்த நிகழ்வில் அசத்தலான போன்கள், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பல சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக இந்த சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன.
அதேபோல் இந்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது கேலக்ஸி டேப் எஸ்9, கேலக்ஸி டேப் எஸ்9 பிளஸ், கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா உள்ளிட்ட டேப்லெட் மாடல்கள் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்போது இந்த டேப்லெட் மாடல்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா அம்சங்கள்: 14.6-இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளேவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/51ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா மாடல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா மாடலில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வசதி இதில் உள்ளது. அதேபோல் 11200 எம்எஏச் பேட்டரி வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயர் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். மேலும் செல்பிகளுக்கும், விடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி + 12எம்பி அல்ட்ரா வைடு கேமராக்களை கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர இன்-டிஸ்பிளே, கைரேகை ஸ்கேனர், 5ஜி, எல்டிஇ, வைஃபை 6, யுஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 பிளஸ் அம்சங்கள்: 12.4-இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசரஸ் உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். பின்பு 12எம்பி செல்பி கேமரா, 10090 எம்ஏஎச் பேட்டரி, 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, புளூடூத் வி5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 பிளஸ் டேப்லெட்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அம்சங்கள்: 11-இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 மாடல். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8400 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்டெல்.
13எம்பி ரியர் கேமரா மற்றும் 12எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமராவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதேபோல் இந்த சாதனம் குறைந்த எடையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன விலை?
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 மாடலின் ஆரம்ப விலை $799.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.65,700). அதேபோல் கேலக்ஸி டேப் எஸ்9 பிளஸ் மாடலின் ஆரம்ப விலை $999.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ82,100). கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா மாடலின் ஆரம்ப விலை $1,199.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ98,500).
அமெரிக்காவில் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த டேப்லெட் மாடல்கள் விற்பனைக்கு வரும். குறிப்பாக பீஜ் மற்றும் கிராஃபைட் நிறங்களில் இந்த மூன்று டேப்லெட் மாடல்களை வாங்க முடியும். விரைவில் இந்த டேப்லெட் மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








