Home
Tablets

8,000mAh பேட்டரி.. 13MP கேமரா.. பிரபலமான Samsung டேப்லெட் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி டேப் எஸ்9இ கேலக்ஸி டேப் எஸ்9 பிளஸ், கேலக்ஸி டேப் எஸ்9 அல்ட்ரா ஆகிய டேப்லெட் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல்கள் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 சீரிஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பிரபலமான சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 இன் 128ஜிபி வைஃபை வேரியண்ட் இந்தியாவில் ரூ.58,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பிரபலமான Samsung டேப்லெட் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 இன் 128ஜிபி வைஃபை வேரியண்டை ரூ.50,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வாங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். இப்போது இந்த டேப்லெட் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

11 இன்ச் WQXGA டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மாடல். மேலும் 2560 x 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாம்சங் டேப்லெட் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மாடல். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் மீடியாடெக் சிப்செட் விட இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மிகவும் சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மாடல் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் எனறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

13எம்பி பிரைமரி கேமரா + 6எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே டேப்லெட் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் டேப்லெட். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் டேப்லெட்.

8ஜிபி ரேம் மற்றும் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8.

பிரபலமான Samsung டேப்லெட் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மாடலில் 8000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள், கைரேகை ஸ்கேனர், 5ஜி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.

அதேபோல் 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மாடல். எனவே இந்த டேப்லெட் மாடலை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த டேப்லெட் மாடல் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S8 with 8000 mAh battery gets Rs 8000 price cut: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X