தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்8 மாடல்.!

|

சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ், கேலக்ஸி எஸ்8 அல்ட்ரா போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி டேப் எஸ்8

கேலக்ஸி டேப் எஸ்8

தற்போது வெளிவந்த தகவலின்படி, கேலக்ஸி டேப் எஸ்8 மாடல் ஆனது கிரே, சில்வர் மற்றும் ரோஸ் கோல்ட் போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி டேப் எஸ்8 மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

எதுக்கு வீண் அடிக்கனும்: அளவான டேட்டா மலிவான விலை- ஏர்டெல், விஐ பயனர்களே இதோ பெஸ்ட் பிளான்!எதுக்கு வீண் அடிக்கனும்: அளவான டேட்டா மலிவான விலை- ஏர்டெல், விஐ பயனர்களே இதோ பெஸ்ட் பிளான்!

சாம்சங் டேப் எஸ்8 மாடல்

சாம்சங் டேப் எஸ்8 மாடல் ஆனது 11-இன்ச் எல்டிபிடிஎஸ் டிஸ்பிளே வசதியை கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL அறிமுகம் செய்த இரண்டு புதிய திட்டங்கள்: Disney+ Hotstar நன்மை கூட இருக்கு- என்ஜாய் பண்ணுங்க.!BSNL அறிமுகம் செய்த இரண்டு புதிய திட்டங்கள்: Disney+ Hotstar நன்மை கூட இருக்கு- என்ஜாய் பண்ணுங்க.!

லின் பின்புறம் 13எம்பி

சாம்சங் டேப் எஸ்8 மாடலின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

எலோன் மஸ்க்கின் Starlink இல் வேலை பார்க்க ஆசையா? இந்தியர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..எலோன் மஸ்க்கின் Starlink இல் வேலை பார்க்க ஆசையா? இந்தியர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..

 8000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் சாம்சங் டேப் எஸ்8 மாடலில் 8000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த சாதனம் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

2021 இறுதிக்குள் Xiaomi மற்றும் Redmi பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டம்.! என்னென்ன மாடல்கள்?.2021 இறுதிக்குள் Xiaomi மற்றும் Redmi பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டம்.! என்னென்ன மாடல்கள்?.

கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை

கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடல் 12.4-இன்ச் WQGA TFT LCD டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,560 × 1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு பகுதிக்கும் இணைய சேவை: 7287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டம்- மத்திய அரசு அனுமதி!ஒவ்வொரு பகுதிக்கும் இணைய சேவை: 7287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டம்- மத்திய அரசு அனுமதி!

கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை

இந்த கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலில் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவும்உள்ளது. எனவே இயக்கத்திறகு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுஇந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபிஉள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடல் 10,090 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, எஸ் பென் ஆதரவு, டால்பி அட்மோஸ் ஆதரவு உள்ளிட்டபல ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தசாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S8 Series May Launching Soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X