Home
Tablets

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடல்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலை வரும் ஜூன் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ சாதனத்துடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து, ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ்,நெதர்லாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இப்போது இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ அம்சங்கள்

டிஸ்பிளே: 12.4-இன்ச் எல்சிடி டச் ஸ்கிரீன் டிஸ்பிளே(2560x1600 பிக்சல்கள்)
60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 ஆதரவு
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி/128
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 10,900 எம்ஏஎச் பேட்டரி
45 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
எஸ்-பென் ஆதரவு
5 ஜி, புளூடூத், வைஃபை,
யூ.எஸ்.பி-சி போர்ட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ விலை

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ விலை

64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.60,700-ஆக உள்ளது. பின்பு 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.64,800-ஆக உள்ளது. மேலும் மிஸ்டிக் பிளாக்,மிஸ்டிக் சில்வர், மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பிங்க் நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடல் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் அம்சங்கள்

டிஸ்பிளே: 8.7-இன்ச் WXGA+ TFT டிஸ்பிளே (1340 x 800 பிக்சல்கள்)
சிப்செட்: ஹீலியோ பி22டி சிப்செட் (MT8768T) உடன் கார்டெக்ஸ்-ஏ53 கோர் ஆதரவு
PowerVR GE8320 ஜிபியு ஆதரவு
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 2எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
பேட்டரி: 5100 எம்ஏஎச் பேட்டரி
15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி,
புளூடூத் 5 எல்இ, ஜிபிஎஸ், க்ளோனாஸ்
யூ.எஸ்.பி 2.0 டைப்-சி போர்ட்
டால்பி அட்மோஸ் ஆதரவு
இரட்டை-ஸ்பீக்கர் அமைப்பு

 சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் விலை

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் விலை

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனதின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.15,400-ஆக உள்ளது. சாம்பல் மற்றும்வெள்ளி நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S7 FE with 8 Mega Pixel Camera Launching in India on June 23: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X