அசத்தலான சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடல் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதுதவிர டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை விற்பனை செய்து வருகிறது சாம்சங் நிறுவனம்.

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். ஆனாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் இடம்பெற்றுள்ளன என்பது குறப்பிடத்தக்கது.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலின் விலை ரூ.41,999-ஆக உள்ளது. மேலும் மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் சில்வர், மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பிங்க் போன்ற நிறங்களில் இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

அதேபோல் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் இந்தியா போன்ற தளங்களில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலை வாங்க முடியும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை சாதனம் ஆனது 12.4 இன்ச் WQGA TFT LCD டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 2,560 × 1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலில் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

இந்த புதிய டேப்லெட் மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. பின்பு இதன் ஸ்டோரேஜ் 1TB வரை விரிவாக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலில் 10,090 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, எஸ் பென்ஆதரவு, டால்பி அட்மோஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப் மாடல்.

டூயல்-பேண்ட் வைஃபை (2.4 GHz + 5 GHz), ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடல். மேலும் இந்த சாதனத்தின் எடை 608 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications