Home
Tablets

அசத்தலான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி மாடல் ஆனது சத்தமின்றி ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சாதனம் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி மாடல்.

 டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி மாடல்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி மாடல் ஆனது 12.4-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,600x2,560 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

வசதியைக்

இந்த புதிய டேப்லெட் மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி ஆக்டோ-கோர் னாப்டிராகன் 750 ஜி ஆக்டா கோர் SoC(இரண்டு கார்டெக்ஸ் ஏ 77 மற்றும் ஆறு கார்டெக்ஸ் ஏ 55 கோர்கள்) வசதியைக் கொண்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி.

 எஸ் 7 எஃப்இ 5ஜி மாடலில்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி

இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி மாடலில் 8எம்பி ரியர் கேமரா ஆதரவுää 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. பின்பு 1080p வீடியோ ரெக்கார்டிங் (30fps), எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியா அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனத்தின் கேமராக்கள்.

எஸ் பென் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி மாடலில் 10,090 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, எஸ் பென் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

 ப்ளூடூத் வி 5இ யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்இ கிகாபிட் வைஃபை மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். மேலும்  மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் சில்வர் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

ப்ளூடூத் வி 5, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், கிகாபிட் வைஃபை மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். மேலும் மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் சில்வர் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ 5ஜி மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.57,800-ஆக உள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S7 FE 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X