புதிய நிறத்தில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 + மற்றும் கேலக்ஸி டேப் எஸ் 7 அறிமுகம்.. விலை இது தான்..

|

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 மற்றும் கேலக்ஸி டேப் எஸ் 7 பிளஸ் ஆகிய சாதனங்களில் புதிதாக மிஸ்டிக் நேவி நிற வண்ணத்தைச் சேர்ப்பதாக இன்று அறிவித்துள்ளது. டேப்லெட்டுகள் முன்பு மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் பிரான்ஸ் மற்றும் மிஸ்டிக் சில்வர் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10000 சலுகை பெற

ரூ.10000 சலுகை பெற

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 + மற்றும் கேலக்ஸி டேப் எஸ் 7 ஆகியவை இப்போது மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் சில்வர் மற்றும் மிஸ்டிக் நேவி ஆகிய நிறங்களில் இப்போது சாம்சங்.காம் மற்றும் முன்னணி சில்லறை கடைகளில் வாங்குவதற்குக் கிடைக்கின்றது. சலுகைகளின் ஒரு பகுதியாக, கேலக்ஸி டேப் எஸ் 7 மற்றும் கேலக்ஸி டேப் எஸ் 7 + ஐ வாங்கும் வாடிக்கையாளர்கள் எச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்கள் முறையே ரூ.9000 மற்றும் ரூ.10000 சலுகை பெறலாம்.

சலுகை

சலுகை

கூடுதலாக, இவர்களுக்கு டேப் கீபோர்டு மீதான சலுகையாக ரூ.10000 தள்ளுபடி மற்றும் கேலக்ஸி பட்ஸ் + மீது ரூ.7000 தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 விலை ரூ.54,999 ஆகவும், கேலக்ஸி டேப் எஸ் 7 + விலை ரூ.69,999 ஆகவும் இருக்கிறது. இவை சாம்சங்கின் சமீபத்திய ஒன் யுஐ 3 மென்பொருள் புதுப்பிப்புடன் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங் ஒன் யுஐ 3.0 புதுப்பிப்பு

சாம்சங் ஒன் யுஐ 3.0 புதுப்பிப்பு

சமீபத்திய ஒன் யுஐ 3 மென்பொருள் புதுப்பிப்பு மூலம், பயனர்கள் தங்கள் டேப்லெட்களுடன் இன்னும் அதிகமான அம்சங்களை பயன்படுத்த முடியும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ் 21 தொடர் மற்றும் கேலக்ஸி பட்ஸ் புரோ மூலம் இணைக்கப்பட்ட அனுபவங்களை மேம்படுத்தலாம். கேலக்ஸி டேப் எஸ் 7 மற்றும் கேலக்ஸி டேப் எஸ் 7 + பயனர்கள் இப்போது கேலக்ஸி எஸ் 21 போன்ற ஒரு யுஐ 3.1 இயங்கும் பிற சாதனங்களுடன் ஷேரிங் செய்ய முடியும்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, 11' இன்ச் எல்சிடி டிஸ்பிளேவுடன் 2560 x 1600 பிக்சல்கள் திரை தீர்மானம் கொண்டது. கேலக்ஸி டேப் எஸ் 7 பிளஸ் சாதனம், 12.4' இன்ச் முழு எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவுடன் 2800 x 1700 பிக்சல்கள் திரை தீர்மானம் கொண்டுள்ளது. இரண்டு டேப்லெட்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் உடன் அட்ரினோ 650 ஜி.பீ. சேமிப்பு, மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை சேமிப்பிடத்தை வழங்குகிறது.

சேமிப்பு

சேமிப்பு

சாதனங்கள் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது, சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 + இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மூலம் வருகிறது. இவை இரண்டும் Android 10 இல் OneUI 2.0 உடன் இயங்குகின்றது. கேலக்ஸி டேப் எஸ் 7 சாதனம் 7040 எம்ஏஎச் பேட்டரியுடனும், கேலக்ஸி டேப் எஸ் 7 பிளஸ் 10,090 எம்ஏஎச் பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy Tab S7 and Galaxy Tab S7+ new Mystic Navy color launched in India: Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X