சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் எஸ்6 லைட் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த சாதனம் எஸ் பென் ஆதரவு மற்றும் 10.4-இன்ச் டிஸ்பிளே வசதி மற்றும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்டின் வைஃபை ஒன்லி வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.27,999-விலையிலும், கேலக்ஸி டேப் எஸ்6லைட்டின் எல்.டி.இ மாடல் ரூ 31,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த டேப்லெட் அங்கோரா ப்ளூ, சிஃப்பான் பிங்க் மற்றும் ஆக்ஸ்போர்டு கிரே வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

இந்த அட்டகாச சாதனம் வரும் ஜூன் 16 முதல் முன்பதிவு செய்யக் கிடைக்கும் மற்றும் இதன் விற்பனை ஜூன் 17 முதல் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்பு இதன் வைஃபை மாடல் ஆனது அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா இ-ஸ்டோரில் மட்டுமே பிரத்யேகமாக வாங்க கிடைக்கும்.மேலும் இதன் எல்டிஇ மாடல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும்சாம்சங் இந்தியா இ-ஸ்டோர் மூலம் வாங்க கிடைக்கும்.

இந்த சாதனத்தின் அறிமுகம் சலுகைகள் பொறுத்தவரை, கேலக்ஸி டேப் எஸ்6 லைட்டை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ.11,900
மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் ரூ.2,999-க்கும் அல்லது ரூ.4,999 மதிப்புள்ள கேலக்ஸி டேப் எஸ் 6 லைட் புக் கவர் ரூ.2,500 க்கும் வாங்க கிடைக்கும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் ஆனது 10.4-இன்ச் WUXGA TFT டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2000 × 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் மிகவும் எதிர்பார்த்த 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி
உள்ளது எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலின் பின்புறம் 8எம்பி ஆட்டோஃபோகஸ் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ
கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த சாதனத்தின் சேமிப்பு வசதியைப் பற்றி பேசுகையில், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம்.
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியைக் கொண்டுள்ளது கேலக்ஸி டேப் எஸ்6 மாடல்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலில் 7040எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வீடியோ பிளேபேக் 13 மணி நேரம் வரை கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

மேலும் இந்த சாதனத்தில் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். பின்பு கேலக்ஸி டேப் எஸ்6 மாடலின் எடை 467கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications