7040எம்ஏஎச் பேட்டரியுடன் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் அறிமுகம்.! விலை?

|

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனத்தை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் ஆனது எஸ் பெண் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுததுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தைப் பற்றிய பல்வேறு விவரங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் ஆனது 10.4-இன்ச் WUXGA TFT டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2000 × 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

 9611 பிராசஸர் வசதி

குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் மிகவும் எதிர்பார்த்த 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி உள்ளது எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Zoom செயலி.! 23லட்ச ரூபாய்க்கு பயனர்களின் தகவல்கள் விற்பனை? ஹேக்கர் போட்டுடைத்த உண்மை!Zoom செயலி.! 23லட்ச ரூபாய்க்கு பயனர்களின் தகவல்கள் விற்பனை? ஹேக்கர் போட்டுடைத்த உண்மை!

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலின் பின்புறம் 8எம்பி ஆட்டோஃபோகஸ் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

OnePlus 8 Pro: அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!OnePlus 8 Pro: அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த சாதனத்தின் சேமிப்பு வசதியைப் பற்றி பேசுகையில், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியைக் கொண்டுள்ளது கேலக்ஸி டேப் எஸ்6 மாடல்.

இந்த VPN உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் செய்யவும்.! எச்சரிக்கை.!இந்த VPN உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் செய்யவும்.! எச்சரிக்கை.!

7040எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலில் 7040எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வீடியோ பிளேபேக் 13 மணி நேரம் வரை கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

இணைப்பு ஆதரவுகள் அடக்கம்

மேலும் இந்த சாதனத்தில் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். பின்பு கேலக்ஸி டேப் எஸ்6 மாடலின் எடை 467கிராம் ஆகும்.

கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனத்தின் விலைப் பற்றிய தகவல்கள் சரியாக கிடைக்கவில்லை, விலை தெரிந்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S6 Lite launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X