Home
Tablets

10.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி.!

சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவகத்தில் தனது கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

10.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி.!

மேலும் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடலின் விவரங்கள் கொரியாவின் அதிகாரப்பூர்வ விளம்பர பக்கத்தில் காணப்பட்டது. குறிப்பாக இந்த சாதனத்தின் மாடல் எண் T866N என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் 5ஜி ஒருங்கிணைந்த ஸ்னாப்டிராகன் எக்ஸ்50 5ஜி மோடம் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விரைவில் வெளிவரும் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் ஆனது 10.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது என்றும் 1600 x 2560 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளியிடப்படும்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு அட்ரினோ 640ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள் இடம்பெறுவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த சாதனத்தின் கேமராப் பற்றி பேசுகையில், 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுகளுடன் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி வெளிவரும், பின்பு எல்இடி பிளாஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சாதனம்.

இந்த டேப்லெட் சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி.!

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடலில் 7040எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது என்றும், பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S6 5G Official Listing Suggests Arrival In 2020: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X