வியக்கவைக்கும் விலையில் அட்டகாசமான Samsung Galaxy Tab S6 5G சாதனம் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி சாதனத்தின் சிறபம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி
கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் 5ஜி ஒருங்கிணைந்த ஸ்னாப்டிராகன் எக்ஸ்50 5ஜி மோடம் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனம் மற்ற டேப்லெட் மாடல்களை விட சற்று வித்தயசமாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

1600 x 2560 பிக்சல் திர்மானம்
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் ஆனது 10.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு1600 x 2560 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

டால்பி அட்மோஸ் ஆதரவு
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள் இடம்பெறுவதால்பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக டால்பி அட்மோஸ் ஆதரவுடன் ஏ.கே.ஜி-டியூன் செய்யப்பட்ட குவாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்புகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

7040எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடலில் 7040எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் பெண் ஆதரவு
குறிப்பாக கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் எஸ் பெண் ஆதரவுடன் வெளிவந்துள்ளது, எனவே பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் மவுண்டன் கிரே நிறத்தில் கிடைக்கும் என அந்நிறுவனம்தெரிவித்துள்ளது.

கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி விலை?
இந்த கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் ஆனது புதிய தொழில்நுட்ப வசதியும், பின்பு சிறந்த வடிவமைப்பு கொண்டுவெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் இந்திய விலைமதிப்பு ரூ.60,280-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications