புதிய வசதியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ.!
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனம் பிக்ஸ்பி வாய்ஸ் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி டேப் எஸ்5இ டிஸ்பிளே:
கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனம் பொதுவாக 10.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1600 பிக்சல் திர்மானம் மற்றும் 16:10 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் அடக்கம்.

ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்
இந்த சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் வசதி உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக் இருக்கும். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம்.

7040எம்ஏஎச் பேட்டரி
கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனத்தில் 13எமபி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 7040எம்ஏஎச் பேட்டரி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம்.

அட்டகாசமான விலை:
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனத்தின் விலை ரூ.35,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications