விரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.!
கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த டேப்.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட் சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக அந்நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இதனுடன் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி டேப் எஸ்4 மாடலின் பல்வேறு சிறப்பம்சங்களை சாம்சங் நிறுவனம் தற்சமயம் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், 7300எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த கேலக்ஸி டேப் எஸ்4 மாடல்.

கேலக்ஸி டேப் எஸ்4:
கேலக்ஸி டேப் எஸ்4 மாடல் பொதுவாக 10.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2560×1600 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலுமட் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன்இந்த கேலக்ஸி டேப் எஸ்4 மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த டேப். மேலும் கைரேகை சென்சார் வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும்.

நினைவகம்:
இந்த கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் கருப்பு மற்றம் சாம்பல் நிறத்தில் இந்த டேப்லெட் மாடல் வெளிவரும் என்பது
குறிப்பிடத்தக்கது.

கேமரா:
டேப் எஸ்4 சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுஇ அதன்பின்பு இதனுடைய
செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 7300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications