Home
Tablets

ஐரிஸ் ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்4.!

இந்த டேப்லெட் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இப்போது ஸ்மார்ட்போன்களுக்கு கூட அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் விரைவில் கேலக்ஸி டேப் எஸ்4 என்ற சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி டேப் எஸ்4 சாதனம்.

கேலக்ஸி டேப் எஸ்4 பொதுவாக ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் ஹோம் பட்டன் ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேலக்ஸி டேப் எஸ்4 பற்றிய பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி டேப் எஸ்4:

கேலக்ஸி டேப் எஸ்4:

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனம் பொதுவாக 10.5-இன்வ் குவாட் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், அதன்பின்பு 2,560 x 1,600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 1.90ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது டேப்லெட். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த டேப் எஸ்4 மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த டேப்லெட் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி டேப் எஸ்4 பொதுவாக 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

குறிப்பாக கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S4 to reportedly come with iris scanner DeX support : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X