7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.!
மேலும் இந்த சாதனத்தில் சார்ஜ் குறையும் பிரச்சனை கண்டிப்பாக கிடையாது என்று தான் சொல்ல வேண்டும், அதற்கு தகுந்தபடி இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனம் மற்றும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்த வண்ணம் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சாதனத்தில் சார்ஜ் குறையும் பிரச்சனை கண்டிப்பாக கிடையாது என்று தான் சொல்ல வேண்டும், அதற்கு தகுந்தபடி இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தை பற்றிய பல்வேறு தகவல்களை பார்ப்போம்.

கேலக்ஸி டேப் எஸ்4:
கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 10.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பினபு 1600 x 2560 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் கொண்டவையாக உள்ளது டேப் எஸ்4, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த டேப் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 835
கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளிவரும். பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் கேலக்ஸி டேப் எஸ்4.

மெமரி
கேலக்ஸி டேப் எஸ்4 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் வெளிவரும்.

கேமரா
டேப் எஸ்4 சாதனத்தில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எல்டிஇ வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி
வைபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 7300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறுதகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications