இதுதான் புதிய சாம்சங் டேப்லெட்.. 11600எம்ஏஎச் பேட்டரி.. 12எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா (Samsung Galaxy Tab S12 Ultra) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இப்போது இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy Tab S12 Ultra Specifications): 14.6-இன்ச் Dynamic AMOLED
டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தை தரும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் 3என்எம் டைமன்சிட்டி 9500 சிப்செட்(MediaTek's 3nm Dimensity 9500 chipset) உடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்தலாம்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
One UI 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த சாதனத்தில் உள்ளன.
12எம்பி ரியர் கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
11600எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா மாடல் வெளிவரும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் மாடல் ஆனது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய டேப்லெட் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைஃபை, 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்களும் இந்த மாடலில் உள்ளன. ஆகவே இந்த மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா மாடல் சற்று உயர்வான விலையில் வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credits: @ONLEAKS SMARTPHONE CHECKER, samsung


Click it and Unblock the Notifications