அடுத்த சாம்சங் 5ஜி டேப்லெட் ரெடி.. 10600mAh பேட்டரி.. 12எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ்(Samsung Galaxy Tab S12+) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது BIS சான்றிதழ் தளத்தில் SM-X846Bஎன்ற மாடல் நம்பர் உடன் இந்த டேப்லெட் காணப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த சாதனத்தின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy Tab S12 Plus Specifications): 12.4-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தை தரும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் 3என்எம் டைமன்சிட்டி 9500 சிப்செட்(MediaTek's 3nm Dimensity 9500 chipset) உடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்தலாம்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
One UI 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த சாதனத்தில் உள்ளன.
12எம்பி ரியர் கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
10600எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் மாடல் வெளிவரும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் மாடல் ஆனது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது,
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய டேப்லெட் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைஃபை, 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் மாடல் சற்று உயர்வான விலையில் வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credits: notebookcheck, samsung


Click it and Unblock the Notifications