ரெடியா இருங்க.. 8400எம்ஏஎச் பேட்டரி.. IP68 ரேட்டிங்.. வருகிறது புதிய Samsung 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 (Galaxy Tab S11) மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் டேப்லெட் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 அம்சங்கள்: 11-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 x 1600 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த டேப்லெட் மாடலில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவும் உள்ளது. பின்பு S பென் ஆதரவுடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவரும்.
எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 13எம்பி கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. எனவே இதன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
ஒன் யுஐ 8 (One UI 8) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடல் வெளிவரும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு 7 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும்.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடல் வெளிவரும். மேலும் நான்கு ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
8400mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
புளூடூத் 5.4இ வைஃபை 6இ, 5ஜி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் 482 கிராம் ஆகும். அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப் (MediaTek's Dimensity 9400 chip) உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவரும்.
photo credit: winfuture


Click it and Unblock the Notifications








