Home
Tablets

பட்ஜெட் விலையில் புது Samsung 5ஜி டேப்லெட்.. 8000mAh பேட்டரி, S Pen உடன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் டேப்லெட் ஆன கேலக்ஸி டேப் எஸ்11 சீரீஸ் மாடலக்ளை அறிமுகப்படுத்தத் தயாராகி வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்த, அதன் பட்ஜெட் விலை டேப்லெட்டின் இந்திய விலை விவரங்களை அறிவித்துள்ளது.

அதாவது சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் டேப்லெட்டின் இந்திய விலை விவரங்கள் (Samsung Galaxy Tab S10 Lite India prices) ஒருவழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதோடு சேர்த்து அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் புது Samsung 5ஜி டேப்லெட்!

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் டேப்லெட்டின் இந்திய விலை விவரங்கள்: 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த டேப்லெட்டின் வைஃபை ஒன்லி வேரியண்ட் ஆனது ரூ.30,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இதேபோல 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் வைஃபை வேரியண்ட் ஆனது ரூ.40,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

ஒருவேளை நீங்கள் 5ஜி செல்லுலார் கனெக்டிவிட்டியை பெற விரும்பினால், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வரும் மாடல் ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் டாப்-எண்ட் 5ஜி வேரியண்ட் ஆனது ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கும்

விற்பனையை பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி (MicroSD) மூலம் 2டிபி வரை மெமரியை விரிவாக்கும் செய்யும் ஆதரவுடன் வரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் டேப்லெட் ஆனது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Samsung official website) மற்றும் ரீடெயில் பார்ட்னர்கள் வழியாக வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்:
- 10.9 இன்ச் WUXGA+ TFT டிஸ்பிளே (ஒன்பிளஸ் பேட் 2 மடலில் உள்ள அதே LCD டிஸ்பிளே அனால் TFT பேனல் வழியாக சாம்சங்கின் சொந்த விஷன் பூஸ்டர் தொழில்நுட்பத்துடன் 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை வழங்கும்)
- சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 1380 (Exynos 1380) சிப்செட்டால் இயக்கப்படுகிறது.

- சிங்கிள் 8 மெகாபிக்சல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது
- முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது
- ரீடெயில் பாக்ஸில் எஸ் பென் (S Pen) உடன் வருகிறது
- சாம்சங்கின் 'இன்டெலிஜென்ஸ்' அம்சங்களுடன் வருகிறது; கூகுளின் சர்க்கிள் டு சர்ச் அம்சத்தையும் ஆதரிக்கிறது

- 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh பேட்டரியை கொண்டுள்ளது
- ஓஎஸ் அப்டேட்டை பொறுத்தவரை 7 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது; உண்மையிலேயே இது நீண்ட கால பயன்பாட்ட்டை உறுதி செய்யும் ஒரு வாக்குறுதி ஆகும்.

முன்னரே குறிப்பிட்டபடி கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் இந்திய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எக்ஸ் (X) தளம் வழியாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (Yogesh Brar) வெளியிட்டுள்ள விவரங்களின்படி, கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் இந்திய விலை ரூ.59,999 ஆக இருக்கலாம். அதாவது கேலக்ஸி எஸ்24 எப்இ மாடலின் "அதே விலைக்கு" விற்பனைக்கு வரலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S10 Lite WiFi Only and 5G Variants India Price Announced Officially
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X