கொஞ்சம் பொறுங்க.. டால்பி அட்மாஸ்.. 8000mAh பேட்டரி.. வருகிறது புதிய சாம்சங் 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் (Samsung Galaxy Tab S10 Lite) மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் டேப்லெட் ஆனது பட்ஜெட் விலையில் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த டேப்லெட் மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் அம்சங்கள் (Samsung Galaxy Tab S10 Lite Specifications): 10.9-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2112 x 1320 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1330 சிப்செட் (Exynos 1380 Chipset) உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் விற்பனைக்கு வரும் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
8எம்பி ரியர் கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் அறிமுகமாகும். எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டேப்டெல் மாடலின் எடை 540 கிராம் ஆகும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
One UI 7சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் வெளிவரும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு 7 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும்.
8000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் அறிமுகமாகும். எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கும். எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
IP42 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் அறிமுகமாகும். பின்பு இது ஒரு 5ஜி டேப்டெல் மாடல் ஆகும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








